(3343)
உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!
பதவுரை
|
வெள்ளத்து |
– |
திருப்பாற்கடலிலே |
|
அணை |
– |
(திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது |
|
கிடந்தாய் |
– |
பள்ளிகொள்ளும் பெருமானே! |
|
உள்ளன |
– |
எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன் |
|
மற்று உள் ஆ |
– |
உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும் |
|
புறமே |
– |
வெளிவேஷமாக, |
|
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே |
– |
வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும் |
|
சில மாயம் சொல்லி |
– |
சில பொய்யுரைகளைச் சொல்லி |
|
உன்னையும் வஞ்சிக்கும் |
– |
(ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான |
|
கள்ளம் மனம் தவிர்த்து |
– |
கபடமான நெஞ்ச தவிரப்பெற்று |
|
உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் |
– |
உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்; |
|
இனி |
– |
இனிமேல் |
|
உன்னை விட்டு |
– |
பரமயோக்யனான உன்னைவிட்டு |
|
என் கொள்வன் |
– |
வேறு எதைக் கைக் கொள்ளுவேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (உள்ளன) முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக்கொண்டிருந்த வாற்றைச்சொல்லி, பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடுகூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.
மனத்தினுள் நடையாடுகின்ற எண்ணங்களோ வேறுபட்டவை; வெளியே வாயாற் சொல்லுகிறவாசகங்களோ புறப்பூச்சான பொய்யுரைகளேயாம்; எம்பெருமானுடைய ஔதார்யம் முதலிய குணங்களிலும் வடிவழகிலும் மிக ஈடுபட்டவன்போல ‘வள்ளலே! மணிவண்ணனே!’ என்று பலகாலுஞ்சொல்லி * உள்ளவாருள்ளிற்றெல்லா முடனிந்தறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படியான கள்ளமனமுடையவனானகவே யிருந்தேன்; அப்படிப்பட்ட நான் அந்தக் கள்ளமனம் தவிரப்பெற்ற உஜ்ஜீவிக்கவல்லவனாயினேன். இனி வேறுவழிகளிலே செல்ல ப்ரஸக்தியில்லை என்றாயிற்று.
“வஞ்சக்கள்வன் மாமாயன்” என்று ப்ரஸித்தி பெற்றிருக்கிற எம்பெருமானையும் வஞ்சிக்கவல்லவனாயினேன் என்பது தோன்ற ‘உன்னையும்’ என்று உம்மைகொடுத்துப்பேசினார்.
English Translation
I uttered in lip-service,-while inside was something else, -a few lies like “Benevolent Lord, Gem-hued Lord” and such words. Shedding my deceiving nature, I have seen you, and found liberation. O Lord reclining in the ocean, now what other refuge do I have?
