(3297)

(3297)

சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,

ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,

காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்

கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே.

 

பதவுரை

சீலம் இல்லா

நன்மை யொன்று மில்லாத

சிறியன் ஏலும்

சிறியவனா யிருந்தேனாகிலும்

செய் வினையோ

செய்த பாபமோ

பெரிது

பெரிதாயிருக்கின்றது;

ஆல்

அந்தோ!;

ஞாலம் உண்டாய்

(பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே!

நாராயணா

நாராயணனே!

என்று என்று

என்றிப்படிப் பலகாலும் சொல்லி

காலம் தோறும்

எல்லாக்காலத்திலும்

யான் இருந்து

நான் ஆசையோடிருந்து கொண்டு

கை தலை பூசல் இட்டால்

கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால்,

கோலம் மேனி

அழகிய திருமேனியை

காண

நான் ஸேவிக்குமாறு

வாராய்

வருகிறார்யில்லை;

கூவியும் கொள்ளாய்

கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று  அருளிச்செய்வதுண்டு; வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது. இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும்.  நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார். சீலமாவது நன்னடத்தை.  அஃதில்லாமைபற்றித் தம்மை நீசராக அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.  செய்வினையோ பெரிதால் என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு;- “பண்ணின பாபத்தைப் பார்த்தவாறே சிதசிதீச்வரதத்வத்ரயத்தையும் விளாக்குலைகொள்ளும் படி பெருத்திருந்தது.  ஸம்ஸாரிகளுடைய குற்றங்களைப்பொறுக்கு மீச்வரனுடைய குணங்களிலும், அவன்தந்த பக்திரூபாபந்நஜ்ஞானத்திலுங்காட்டில் பெரிதாயாயிற்றிருக்கிறது.”

நல்ல காரியங்களைச் செய்யாமற்போனாலும் செய்ய வேணுமென்று நெஞ்சினால் நினைத்தாலும் பலனுண்டு; தீய காரியங்கள் விஷயத்தில் அப்படியல்ல; தீயன செய்யவேணுமென்று நெஞ்சினால் நினைத்திருந்து அப்படியே செய்யாதொழிந்தால் குற்றமில்லை என்று நூற்கொள்கையுண்டு.  நான் அப்படியல்லாமல் தீயன செய்து தலைக்கட்டினே னென்கிறார் செய்வினையோ என்பதனால்.

தாம் செய்த பாவங்கள் மிகப்பல என்பதை மேலே முதலிக்கிறார். எம்பெருமானை நான் விரும்பினபடியே அநுபவிக்கப்பெறாமல் இழந்திருக்கினன்றேனாதலால் செய்வினை பெரிதென்னுமிடத்தில் ஸந்தேஹமுண்டோவென்கிறார்.  அசோகவனத்தில் பிராட்டியும் “…. தவளஸ்ரீமமைவ

துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய:இ ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ” என்றாள்.

விரோதிகளைத் தொலைத்து என்னை ரக்ஷிக்கைக்குறுப்பான ஆற்றல்படைத்த அவ்விரண்டு ஆண்புலிகளும் என்னைக் கடாக்ஷியாதே யிருந்தார்களாகில் இது என்னுடைய பாபத்தின் பலனேயன்றோ என்றாள்பிராட்டி.  இங்கு * துஷ்க்ருதம் கிஞ்சித்மஹத் * என்கிறாள்.  கிஞ்சித் என்றால் சிறிது என்றபடி; மஹத் என்றால் பெரிது என்றபடி.  சிறிதாயும் பெரிதாயுமிருக்கிற பாபம் எனக்கு உண்டென்று சொல்லுகிற பிராட்டியின் திருவுள்ளம் யாதெனில்; பகவத் விஷயத்திலேபட்ட அபசாரத்தைச் சிறிய பாபமென்றும் பாகவத விஷயத்திலே பட்ட அபசாரத்தைப் பெரிய பாபமென்றும் கருதினபடி, காட்டுக்குப் புறப்படும் ஸமயத்திலே தன்னை உடன்கொண்டு சொல்லமாட்டேனென்ற பெருமாளை நோக்கி “ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்” என்று பழித்துக்கூறினது பகவத் விஷயாபசாரம்.  மாரிசமாயமான் பின்னே பெருமாள் எழுந்தருளியிருந்தபோது கபடமான கூக்குரலைக் கேட்ட பிராட்டி இளைய பெருமாளை நோக்கிப் பல வார்த்தைகள் சொல்லியிருக்கையில் “…… -அநார்யகருணாம்ப ந்ருசம்ஸ! குலபாம் ஸந!*என்று தொடங்கி** ஸ்ரீமமஹேதோ: ப்ரதிச்சந்ந: ப்ரயுக்தோ பரதேந வாஇ தந்நஸித்யதி ஸௌமித்ரே தவ வா பரதஸ்ய வா.” என்று மிகவும் கடுமையாகப் பழித்துக் கூறினது பாகவதாபசாரம்.  இவற்றுள் பகவதபசாரம் அவ்வளவு கொடிதன்றாகையாலே கிஞ்சித் எனப்பட்டது; பாகவதாபசாரம் மிகக் கொடியதாகையாலே மஹத் எனப்பட்டது.

ஆழ்வார் தாம் கதறிக் கூவியழைக்கிறபடியை அருளிச்செய்கிறார் ஞாலமுண்டாய்! என்று தொடங்கி. விசாலமான பூமிப்பரப்பை யெல்லாம் பிரளய வெள்ளம் கொள்ளை கொள்ளப்புகுந்த காலத்திலே “மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம், உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கியுய்யக்கொண்ட” என்கிறபடியே திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்தவனே! என்று கூப்பிடா நின்றேன்.  ஆபத்துக்கு வந்து உதவுமவனல்லையோ நீ; பிரளயாபத்து வந்தால்தான் ரக்ஷிப்பதென்று ஒரு விரத முண்டோ?

ஞானமூர்த்தி=சேதநகோடியிலே சேர்ந்த எனக்கும் ஞானமுண்டு; ஆகிலும் என்னுடைய ஞானம் என்னை நித்ய ஸம்ஸாரியாக்கிக் கொள்வதற்கன்றோ உதவுகின்றது.  இந்த ஸம்ஸாரத்தைக் கழித்து என்னைத் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுகைக்கீடான ஞானமன்றோ உன்னுடையது.  “ஆமாறொன்றறியேன் நான்” என்றிருக்கும்மடியேனுக்கு “ஆமாறறியும் பிரானே!” என்னப்படுகிற நீ உதவித்தீரவேண்டுமே; நீ செய்யமாட்டாதது ஒன்றுமில்லை.  ஒருவனுக்கு; கண்ணும் தெரியாதே காலும் நடைதாராதேயிருந்தது;

மற்றொருவனுக்குக் கண்ணும் தெரிந்து காலும் நடைதருவதாயிருந்தது; இப்படியிருக்குமானால் ஆர்க்கு ஆர் வழிகாட்டிக்கொண்டு போவார் என்பதை நான் சொல்லவேணுமோ?

ஞானமும் சக்தியுமுள்ளவர்களெல்லாரும் அஜ்ஞரம் அசந்தருமாயிருப்பாரை ரக்ஷித்தேயாகவேணுமென்று ஒரு நிர்ப்பந்தமுண்டோவென்று எம்பெருமானுக்குத் திருவுள்ளமாக, நாராயணா என்கிறார்.  ரக்ஷிக்கவேண்டிய ப்ராப்தியில்தையாகில்

நிர்ப்பந்தமில்லைதான்; ப்ராப்தியுள்ள விடத்திலே உபேக்ஷித்திருந்தால் பழிப்பாகுமன்றோ. “உன்றன்னோடுவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்னும்படியான குடல்துடக்கு

இருக்கும்போது கைவாங்கியிருக்கவல்லையோ? சரீரத்திற்கு ஆகவேண்டிய நன்மையை சரீரியன்றோ நோக்கக்கடமைப்பட்டவன்.  உடையவன் உடமையைப் பெறுகைக்கு வியாபரிக்க வேண்டாவோ? என்பதான கருத்துக்கள் நாராயணா ! என்பதில் உய்த்துணரத்தக்கன

என்றென்று என்கையாலே இப்படியே பலகால் கூப்பிட்டுக்கொண்டேயிருக்கின்றமை காட்டப்பட்டது.  இவர்தாம் கூப்பிடுவது ஒரு ப்ரயோஜனத்திற்காகவாகில் அது கிடைத்த

தென்று வாய் ஓயலாம்;  கூப்பிடுகைதானே ப்ரயோஜநமாகையாலே ஓவாதுரைக்கு முரை இதுவேகாணீர்.

காலந்தோறும் யானிருந்து என்றவிடத்தில் நம்பிள்ளையீடு:-“படுவதெல்லாம்பட்டு நூறே பிராயமாக இருக்கவேணுமோ? குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் முடியவொட்டாது ‘இன்னமும் காணலாமோ’ என்னும் நசை.”

கைதலைபூசலிடுவதாவது-“மத்தகத்திடைக் கைகளைக்கூப்பி” என்றும்  … சிரஸ்யஞ்ஜலிமாதாய” என்றும் சொல்லுகிறபடியே தலைமேல் கரங்குவிக்கை ஆற்றாமையினால் தலைமேல மோதிக் கொள்ளும்படியைச் சொல்லுகிறதென்றுங் கூறுவர்.

கோலமேனி காணவாராய் = ஆசைப்பட்டவர்கள் கண்டு அநுபவிப்பதற்காகவன்றோ இத்திருமேனி படைத்தது.  “பக்தாநாம் த்வம் ப்ரகாசஸே” என்று சொல்லியிருக்க இப்படி யும் உபேக்ஷிப்பதுண்டோ? “வாசிவல்லீரிந்தளுரிர்! வாழ்ந்தேபோம் நீரே !’ என்று வயிறெரிந்து சொல்லும்படியாக வைத்துக்கொள்வது தகுதியோ? பரிமள ப்ரசுரமான தீர்த்தத்தைச் சேகரித்துவைப்பது விடாயர்விடாய் கெடுவதற்காகவன்றோ;  அதனை அவர்கட்கு எட்டாதேவைப்பது முண்டோ? என்கிறார். காணவாராய் என்றது காணவரவேணுமென்றபடியன்று; காணவருகின்றிலையே! என்றபடி.  நித்ய விபூதியிற்சென்று ஸேவிப்பதிலுங்காட்டில் இவ்

விபூதியிலேயே ஸேவிக்கப்பெறுதல் ப்ரமோத்தேச்யமாகையாலே இக்கருத்துத் தோன்ற “கூவியுங்கொள்ளாயே” என்கிறார்.

 

English Translation

I stand with hands joined over my head and call incessantly, “O Lord-who swallowed-the-Universe!”, “Icon-of-knowledge!”, “Narayana!”, and many other names; you do not show yourself not call me unto you.  Alas, I am a wrteched low-born, great indeed are my misdeeds

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top