(3293)
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர்அணங் காடுதல் கீழ்மையே.
பதவுரை
|
(அன்னைமீர்) |
– |
தாய்மார்களே! |
|
வேதம் வல்லார்களை கொண்டு |
– |
வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு |
|
விண்னோர் பெருமான் |
– |
நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய |
|
திருபாதம் |
– |
திருவடிகளை |
|
பணிந்து |
– |
அச்ரயித்து |
|
இவள் நோய் இது |
– |
இவளுடைய இந்த நோயை |
|
தீர்த்துக்கொள்ளாது போய் |
– |
போக்கிக்கொள்ளாமல் |
|
ஏதம் பறைந்து |
– |
இழிவான பேச்சுகளைப்பேசி |
|
அல்ல செய்து |
– |
ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து |
|
ஊடு |
– |
நடுநடுவே |
|
கள் கலாய் துர்ய் |
– |
தன்னைக் கலந்து துர்வி |
|
கீதம் முழவு இட்டு |
– |
வாத்ய கோஷங்களைப் பண்ணி |
|
நீர் அணங்கு ஆடுதல் |
– |
நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது |
|
கீழ்மையே |
– |
(இக்குடிக்கு) அவத்யமேயாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேதவித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மையென்கிறாள்.
இதில் முதலடியில்இ சிறந்த சாஸ்த்ரார்த்தமொன்று வெளியிடப்படுகிறது; யானையின் மீது ஏறவிரும்புமவர்கள் யானைப்பாகனுடைய அநுமதி கொண்டு புகவேண்டுமாபோலே
ஸ்ரீவைஷ்ணவர்களைப் புரஸ்கரித்துக்கொண்டே எம்பெருமானைப்பணிதல் வேண்டுமென்பது ஸத்ஸம்ப்ரதாயம். …………………… ஸ்ரீபாபிட: க்ஷ்த்ரபந்துச்ச புண்டரிகச்ச புண்யக்ருத் ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவாந்பவேத்ஃ” என்கிற பிரமாணமும்.
இதையடியொற்றி நடாதுர்ரம்மாளருளிச்செய்த ……………………-ஸத்ஸங்காத் பவ நிஸ் ஸ்ப்ருஹோ குருமுகாத் ஸ்ரீசம் ப்;ரபத்யாத்மவாந்” என்பதும் இங்கே அறியத்தக்கன.
இதிஹாஸ ச்ரேடமான ஸ்ரீராமாயணத்தில் இவ்வர்த்தம் அநுடாந சேஷமாகக் கண்டது: ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் ஸ்ரீராமஸந்நிதானத்திலே புகும்போது அப்பெருமாளுடைய வாத்ஸல்ய
ஸௌலப்ய ஸௌசீல்யாதி குணங்களைத்தான் நன்கு அறிந்தவனாகையாலே நேரே அவன்; திருவடிகளிலேயே வந்து விழலாமாயிருந்தும் அங்ஙணம் செய்யாதே * ஸர்வலோக சரண்
யாய ராகவாய மஹாத்மநே. நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீ‘ணமுபஸ்திதம்” என்று வானர முதலிகளைப் பணிந்து துவண்டதெல்லாம் இந்த சாஸ்த்ரார்த்த முறையைப் பின்
பற்றியேயாம். ஸூக்ரிவ மஹாராஜரும் திருவடியை (மாருதியை) முன்னிட்டே பெருமாளைப் பற்றினார்.
கீழ்ப்பாட்டில் “வணங்கீர்கள் மாயப்பிரான் தமர்வேதம் வல்லாரையே” என்று ஸ்ரீ வைஷ்ணவர்களையே உத்தேச்யராகக்கொள்ளும்படி சொல்லிவைத்து, இப்பாட்டில் அந்த
ஸ்ரீ வைஷ்ணவர்களை த்வாரமாகக்கொண்டு பகவதாச்ரயணம் பண்ணும்படி சொல்லுவானேன்? என்னில்;இங்கு நம்பிள்ளை அருளிச்செய்யும்படி: ஸ்ரீவைஷ்ணவர்களே ஆச்ரயணீயர்;அவர்களுக்கு மேற்பட எம்பெருமானளவிலே சென்று ஆச்ரயிக்கவேண்டியதில்
லைதான்; ஆனாலும் ஸஜாதீயர்களிடத்திலே ருசிவிச்வாஸங்கள் கனக்க உண்டாவது அரிதாகையாலே அவர்களைப் பரம சேஷிகளாகக்கொள்ள இசைவு, உண்டாகா தொழியிலும் அவர்களைப் புருஷகாரமாகவாகிலும் கொள்ளப்பாருங்கோளென்று சொல்லுகிறதென்று.
இவள்நோய் இது = இவள் என்றது பகவத் விஷயமான நோய் தவிரமற்றொரு நோய் வந்துபுகுர ப்ரஸக்தியற்றவள் என்று காட்டினபடி. நோய் இது என்றது-* வானோர் தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய் இது என்றபடி.
ஏதம் பறைந்து ® வெறியாடுகிற வேலன் வாயாற்சொல்லுகிற வார்த்தைகளெல்லாம் அநுவதிக்கவும் தகாதாகையாலே ஏதமென்று பொதுவிலே சொன்னபடி, அவன் செய்கிற காரியங்களும் அப்படியே மிகவும் ஆபாஸங்களாகையாலே அல்லசெய்து எனப்பட்டது;
ஸ்வரூபாநு ரூபமல்லாதவற்றைச் செய்து என்றபடி. அதை விவரிக்கிறது-கள் ஊடுகலாய்த்துர்ய் என்றும் கீதமுழலிட்டு அணங்காடுதல் என்றும்.
நிஹீநத்ரவ்யங்களைக் கலந்து துர்வி, பொல்லாத பாட்டோடுங்கூடின வாத்யங்களை ப்ரவர்த்திப்பித்து நீங்கள் தைவாவேசத்தாலே ஆடுகிறவிது இக்குடிக்கே; இழுக்கு என்ற
தாயிற்று.
English Translation
You mix and pour toddy with wasteful worlds and sinful deeds and dance to loud music in a frenzy. Oh, this is lowly, with the help of Vedic seers, worship the auspicious feet of the Lord of celestials. That will cure this girl’s malaise
