(3219)
ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே.
பதவுரை
|
ஏற்கும் பெரும் புகழ் |
– |
தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய் |
|
வானவர் ஈசன் |
– |
நித்யஸூரி நாதனான ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன் |
|
சொல் |
– |
அருளிச்செய்த |
|
ஏற்கும் பெரும் புகழ் |
– |
ஏற்ற பெரும்புகழையுடைய |
|
ஆயிரத்துள் |
– |
இவ்வாயிரத்தினுள் |
|
கண்ணன் தனக்கு |
– |
கண்ணபிரான் விஷயமாக |
|
ஏற்கும் பெரும் புகழ் |
– |
தகுதியான சிறந்த புகழையுடைத்தான |
|
இவை ஓர் பத்தும் |
– |
இந்தத் திருவாய்மொழியை |
|
சொல்ல வல்லார்க்கு |
– |
ஓதவல்லவர்க்கு |
|
சன்மம் இல்லை |
– |
மறுபிறப்பு இல்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பாசுரத்தில் நான்கு அடிகளிலும் ஏற்கும் பெரும்புகழ் என்ற விசேஷணம் அமைந்திருக்கு மழகு நோக்கத்தக்கது. எம்பெருமானை உபய விபூதிநாதன் என்று சொன்னால் ஏற்றிக்குமாபோலே ஆழ்வாரை ‘எம்பெருமான் கவி இவர்’ என்றால் அப்படியே ஏற்றிருக்கும். அவ்வெம்பெருமானை உள்ளபடியே புகழும் வேதம் திருவாய்மொழிதான்’ என்றால் இதுவும் ஏற்றிருக்கும். ‘ஸ்வரூப நாசமாகப் பிறரைக் கவிபாடாமல் ஸ்வரூபம் நிறம்பெற எம்பெருமானையே கவிபாடுமாறு நியமிக்க இப்பதிகமே இவ்வாயிரத்திலுள்ளும் சிறந்தது என்றால் இதுவும் ஏற்றிருக்குமாயிற்று.
English Translation
This decad of the perfect thousand songs by famous kurugur city’s Satakopan addressing Krishna, glorious Lord of the celestials, gives freedom from rebirth to those who can sing it.
