(3213)
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
பதவுரை
|
கொள்ளும் பயன் இல்லை |
– |
நீங்கள் பெறும் பலன் சிறிது மில்லையாம்படி |
|
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை |
– |
குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து |
|
வள்ளல் புகழ்ந்து |
– |
உதாரனே! என்று கொண்டாடி |
|
நும் வாய்மை இழக்கும் |
– |
உங்களுடைய ஸத்யத்தையிழந்தொழிகிற |
|
புலவீர்காள் |
– |
புலவர்களே! |
|
கொள்ள |
– |
நீங்கள் பாடுகிற துதி மொழிகளைப் பொருத்தமாகக் கொள்ளவல்ல பூர்த்திரயையுடையவனும் |
|
வேண்டிற்று எல்லாம் தரும் |
– |
வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும் |
|
கோது இல் |
– |
குற்ற மற்றவனும் |
|
என் வள்ளல் |
– |
என் விஷயத்தில் மஹோபகாரங்கள் செய்தவனும் |
|
மணி வண்ணன் தன்னை |
– |
நீலமணி வண்ணனுமான பெருமானை |
|
கவி சொல்ல |
– |
கவி பாட |
|
வம்மின் |
– |
வாருங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக.
பயனில்லை யென்பது மாத்திரமன்று; இழவுமுண்டு என்கிறார் மேல். (குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை யிழக்கும் புலவீர்காள்!.) நீங்கள் வாய் பெற்ற பேற்றை இழக்குமத்தனையே யுள்ளது என்கிறார். குப்பைகளைச் கிளறினால் கெடுதலான அம்சங்கள் தென்படுமே யல்லது நன்றானதொன்றும் தென்படமாட்டாது; அதுபோல நீசர்களின் சரிதைகளைக் கவிபாடப்புகுந்தால் மறைந்து கிடக்கும் மாசுகள் தாம் வெளிவரும் என்று அநுபவத்திற்குப் பொருத்தமான அருளிச் செய்கிற அழகு காண்மின்.
செல்வத்தை வள்ளல் புகழ்ந்து – அற்பமான செல்வத்தைக் கனத்ததாகப் பாடியென்று தாற்பரியம். “ஸம்பத்தையுடைய க்ஷுத்ரஜாதியை மஹோதாரையாகப் புகழ்ந்து” என்பது பன்னீராயிரம். வாய்மை யிழத்தலாவது- பொய்சொல்லுபவர்கள் என்கிற அபக்க்யாதியைப் பெறுதல்.
பகவத் விஷயத்தில் கவிபாடினால் விளையும் நன்மைளைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார்;-
கொள்ளக் குறைவிலன்= இதற்கு ஸாமான்யமாகத் தோன்றும் கருத்து ஒன்றுண்டு; மிக அற்பமான செல்வமுடைய அற்பர்களிடத்திலே நாம் பலன்கொள்ளக் கொள்ள, அவர்களுக்கு அது குறைந்துபோம்; அங்ஙனன்றிக்கே எவ்வளவு செல்வம் கொண்டாலும் அங்குச்சிறிதும் துறை ஏற்படாது என்பதாம் நம் ஆசாரியர்கள் அருளிச்செய்வது இங்ஙனேயன்று; (ஈடுகாண்மின்:-) “நீங்கள் யாவையாவைசில ஏற்றங்களையிட்டுக் கவிபாடினிகோள் அவற்றை ஸ்வீகரிக்குமிடத்தில் ஒருகுறையுடையனல்லன்; ஸமஸ்தகல்யாண குணாத்மகன்.”? அற்ப மனிசர்விஷயத்தில் ஏற்றங்களை ஏறிட்டுக் கவிபாடினால் அவற்றைக் கொள்ளும் யோக்யதை அவர்களுக்குக் கிடையாது; எம்பெருமான் விஷயத்தில் எவ்வளவு ஏற்றமாகக் கவிபாடினாலும் அந்த ஏற்றமெல்லாம் அங்கே மிகவும் பொருத்தமாக அந்வயிக்கக் குறையில்லையென்றவாறு. “அந்யத்ர அதத்குணோக்தி:” என்ற பட்டர் ஸூக்தி காண்க.
வேண்டிற்றெல்லாம் தரும்= நீச மனிசர்கள் ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தால் கொள்ளுகிறவனுக்கு மற்றொன்று தேவையானால் அதைக் கொடுக்க அவர்கள் அசக்தரேயாவர்; இங்கு அபேக்ஷிப்பார் தாழ்வாலே இழக்கில் இழக்குமித்தனை; எம்பெருமான் தரமாட்டாத தொன்றில்லை. ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் மாங்கள்யஸ்தவத்தில் – “தேவேந்த்ரஸ் த்ரிவுவநம் அர்த்தமேகபிங்க: ஸர்வர்த்திம் த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய : வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும் ஸம்ப்ராப்தஸ் ஸகல பலப்ரதோ ஹி விஷ்ணு:” என்ற ச்லோகம் இங்கு அநுஸந்தேயம். (ஏகபிங்க;-குபேரன்.)
கோது; இல் – கொடுக்குமிடத்தில் கோதாவது- “கொடுத்தோம்’ என்றிருக்கையும், கைம்மாறு கருதிக் கொடுக்கையும், அளவுபடக் கொடுக்கையும் முதலியன; எம்பெருமானது ஔதார்யத்தில் இவை யித்தனையுமில்லை. ‘என்வள்ளல்’ என்கையாலே எம்பெருமானது ஔதார்யத்தின் சிறப்பு ஆழ்வார்க்கு ஸ்வாநபவஸித்தமென்பது விளங்கும்.
மணிவண்ணன் – எம்பெருமானிடத்தில் ஔதார்யமில்லை யென்றே கொண்டாலும் வடிவழகொன்று போதுமேகவிபாடுகைக்கு என்றவாறு.
English Translation
O Poets with mastery over words! You waste it in praising vile useless trash as great fortune! Come and praise the benevolent Lord-most-perfect. He shall provide for your needs without diminishing.
