(3177)
மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை,
சாவ முள்ளன நீக்கு வ ¡னைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத்,
தேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை,
பாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ.
பதவுரை
|
மூவர் ஆகிய மூர்த்தியை |
– |
மூவரும் தானே என்னலாம் படி யுள்ளவனாய் |
|
முதல் மூவர்க்கும் |
– |
முதல்வராகச் சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் பிரமனீசன் என்ற மூவர்க்கும் |
|
முதல்வன் தன்னை |
– |
காரண பூதனாய் |
|
சாவம் உள்ளன நீக்குவாளை |
– |
(அவர்களுக்கு நேரும்) துன்பங்களை யெல்லாம் போக்குபவனாய் |
|
தட கடல் |
– |
விசாலமான திருப்பாற்கடலிலே |
|
கிடந்தான் தன்னை |
– |
கண்வளர்ந்தருள்பவனாய் |
|
தேவதேவனை |
– |
தேவாதி தேவனாய் |
|
தென் இலங்கை |
– |
தென்னிலங்கையில் |
|
எரி எழ |
– |
அக்னி தலையெடுக்கும்படி |
|
செற்ற |
– |
பகைவரை அழித்த |
|
வில்லியை |
– |
சார்ங்கத்தை யுடையவனாய் |
|
பாவநாசனை |
– |
பரம பாவநனாய் |
|
பங்கயம் தட கண்ணனை |
– |
தாமரை போன்ற பரந்த திருக்கண்களை யுடையவனான எம்பெருமானை |
|
பரவுமின் |
– |
புகழ்ந்து பாடுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் நிரூபித்த பரத்வத்தைக் கேட்டவர்கள் ‘இப்படிப்பட்ட பராத்பரனானவனை நாங்கள் ஆச்ரயிக்க எங்ஙனே கூடும்? என்று கங்கிக்க, அப்படிப்பட்டவன்தானே உங்களோடு ஸஜாதீயனாய் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான் என்ற அவதார வெளிமையை இப்பாட்டில் உணர்த்துகின்றார்.
“மூவராகிய மூர்த்தியை” என்பது கீழ்ப்பாசுரத்தின் அநுபாஷணம். இது அந்தாதித் தொடைக்குச் சேர அமைந்த அநுபஷணமென்ற கொள்ளவேண்டா; “மூவராகிய மூர்த்தி” என்றதனால் ஸ்வரூபைக்யம் சொல்லுகிறது என்ற சிலர் மயங்குதற்கு இடமுண்டாதால் அந்த மயக்கத்திற்கு இடமறும்படி அருளிச் செய்வதற்காகவே அஜபாஷணம் செய்கிறபடி. “முதல் மூவர்க்க முதல்வன்தன்னை” என்ற அடுத்தபடியாக ஸ்பஷ்டமாயருளிச் செய்கையாலே மூவராகிய என்றவிடத்துள்ள அபேத நிர்த்தேசம் கார்யகாரணபாவ ப்ரயுத்தமென்று தெளியக்கடவது.
முதல் மூவர் = அரி அயன் அரன் என்றமூவர்; அயனுக்கும் அரனுக்கும் முதல்வன்னென்றால் ஒக்கும்; அரியையும் சேர்த்து அவனுக்கும் முதல்வன் என்றால் எங்ஙனே பொருந்தும் என்று ஒரு சங்கையுண்டாகும்; இங்கே நம்பிள்ளை அருளிச் செய்கிறார் காண்மின்;- “தான் இவர்களுக்கக் காரணபூதனானா வோபாதி தனக்கு அவ்வருகு காரணாந்தரமின்றிக்கே யிருக்குமென்றபடி; *ஆத்மேச்வரம்* என்கிறபடியே.” – தனக்கும் தானே காரணபூதனென்றதனால் தனக்கு வேறொரு காரணபூதனில்லை யென்பது பெறப்படும் என்றதாயிற்று. அன்றியே, இந்திரனைக் கூட்டி மூவர் என்றதாகக்கொண்டால் சங்கைக்கே உதயமில்லை.
சாபமுள்ளனநீக்குவானை = அம்மூவர்க்கும் நேர்ந்த கஷ்டங்களை போக்குமவன் என்கை. பிரமன் வேதங்களைப் பறிகொடுத்துத் தவித்துநிற்க அவ்வாபயத்தைப் போக்கினதும், சிவன் தகப்பன் தலையைக் கிள்ளியெறிந்த பாவத்தினால் தடுமாறி நிற்க அவ்வாபத்தைப் போக்கினதும்,இந்திரன் அஸுரபாதையினால் வருந்திநிற்க அவ்வாபத்தைப் போக்கினதும்இங்கு அநுஸந்தேயம்.
தடங்கடல் கிடந்தான் தன்னை = இன்னமும்இப்படிப்பட்ட ஆபத்துக்கள் யார்க்கேனும் நேர்ந்தாலர் விரைந்துவந்து காரியஞ்செய்தற்காகக் கடலிலிடங் கொண்டனாயிற்ற. அந்தக் கிடையழகிலீடுபட்டுப் பிரமன் முதலிய தேவர்கள் அங்க வந்து துதிக்கின்றமை பற்றித் தேவதேவனை என்றார்.
தென்னிலங்கை யெரியெழச் செற்ற வில்லியை= அக்நியானது ராவண பயத்தாலே புகமாட்டாமலிருந்த வூரிலே அந்த அக்நியைத் தான் நினைத்தபடி வியாபரிக்கப் பண்ணவல்ல வில்வலியை யுடையனென்கை.
பாவநாசனை=கையும் வில்லுமாயிருக்கிற படியைக் கண்டவளவிலே அனைவருடைய பாவமும் தொலையுமென்க. உத்தர ஸ்ரீராமாயணத்தில் அகஸ்த்யர் ஸ்ரீராமபிரானை நோக்கி “பாபநஸ் ஸர்லலோகாநாம் த்வமேவ ரகுநந்தந” என்ற சொன்னது இங்கு அறியத்தக்கது.
பங்கயத்தடங்கண்ணனைப் பரவுமின்= பாவங்களைத் தொலைப்பவனன்றியே பாவங்களை வளர்ப்பவனானாலும் திருக்கண்ணழகுக்குத் தோற்க வேண்டும்படியன்றோ உலகமெல்லாமிருப்பது; அப்படிப்பட்ட பெருமானைத் துதித்துத் தொழுங்கள் என்றாயிற்று.
English Translation
So praise the Lord of lotus eyes, redeemer of Karmas, He lies in the deep ocean, worshipped by the celestials. He is the Lord of Brahma, Siva and Indra, he destroys our Karmas. He wielded a mighty bow and burnt Lanka to dust.
