(3096)
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே.
பதவுரை
|
கண்ணன் எங்கும் உள்ள என்ற |
– |
எம்பெருமான் எங்கு மிருக்கிறானென்று சொன்ன |
|
மகனை |
– |
புத்திரனை (ப்தஹ்லாதனை) |
|
இரணியன் |
– |
(பிதாவான) ஹிரண்யாசுரன் |
|
காய்ந்து |
– |
கோபித்து |
|
இங்கு இல்லை என்று |
– |
இவ்விடத்தில் இல்லை கிடாய் என்று |
|
தூண் புடைப்ப |
– |
தூணை அறைய, |
|
அங்கு |
– |
அந்தத் தூணிலே |
|
அப்பொழுதே |
– |
அந்த க்ஷணத்திலேயே |
|
அவன் வீய |
– |
அவிவிரணியன்முடியும்படி |
|
தோன்றிய |
– |
ஆவிர்ப்பவித்த |
|
என் சிங்கப் பிரான் |
– |
நரஸிம்ஹ மூர்த்தியான எம்பிரானுடைய |
|
பெருமை |
– |
மேன்மை
|
|
ஆராயும் சீர்மைத்தே |
– |
ஆராய்தற்குரிய தன்மையதோ? |
English Translation
***- கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்-எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன்பட் பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்டபாடு படாதே கிடிகோள்-என்கிறார்.
வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி, அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும், வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,-அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,-அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை நிலையை மறுக்கக் கூடுமாகையாலே, அதற்கு இடமறும்படி கர்ப்பம், கருமுதிர்தல், ப்ரஸவித்தல் முதலியனவும். குழந்தையாய் ஜனித்தல், பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல், அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த வடிவையுடையவனாய், அப்பொழுதே தோன்றினனென்பதும்-அங்ஙன் தோன்றியவிடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால், ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும், பரத்வம் ஸித்தியாமற் போய்விடுதல்பற்றி, அதைவிடத்தோன்றாமலிருப்பதே நலமென்னும்படி யிருக்குமாதலால், அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தனனென்பதும், தேவர், மனிதர், விலங்குகள், தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்கிளிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் சாகாதபடியும் அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற் பெற்ற வரம் பழுதுபடாமைக்காக, நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல், தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றினனென்பதும்,-அஸ்த்ரஸஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும், ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும், பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும், பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி, அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,-பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம் மெய்யாகும்படி, தன் மடிமீது வைத்துக் கொன்றனென்றதும்,-வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி, வாசற்படி மீது வைத்துக் கொன்றானென்பதும், இவைபோன்ற பல விசேஸங்கள் இவ்வவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.
English Translation
When the young lad said Krishna is everywhere, the Father swore, “Not here!” and smote a pillar. Then instantly my Lord appears, -what a wonder! –as a fierce man-lion and destroyed the king.
