(3061)
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே.
பதவுரை
|
என் அம்மானை |
– |
எனக்கு ஸ்வாமியாய் |
|
என் ஆவி ஆவி தனை |
– |
என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய் |
|
எல்லை இல் சீர் |
– |
எல்லையற்ற குணங்களையுடைய |
|
என் கரு மாணிக்கம் சுடதை சொல்லீர்- |
– |
எனது நீலரத்னம் போன்ற வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள். |
|
நல்ல அமுதம் |
– |
நல்ல அம்ருதமர்ய் |
|
பெறற்கு அரிய வீடும் ஆய் |
– |
எளிதாகப் பெறுவதற்கு முடியாத மோக்ஷ நிலத்திற்கும் தலைவனாய் |
|
அல்லி மலர் விரை ஒத்து |
– |
தாமரைப் பூவிலுள்ள பாரிமளம் போல் பரமபோக்யனாய் |
|
ஆண் அல்லன் பெண் அல்லன் |
– |
ஆணுருவ மல்லாதவனாய்ப் பெண்ணுருவமு மல்லாதவனாயிருக்கின்றனவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “சொல்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீரே” என்று தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவுந் தவிர்ந்த ஆழ்வார்பின்னையும் தம்முடைய நப்பாசையினால் ஸம்ஸாரி யளையழைத்து என்னாயனான ஸர்வேச்வரனை எல்லாருங் கூடியாகிலும் ஒருவடிசொல்லுவோமே! என்கிறார்.
என் அம்மானைச் சொல்லீர்- அற்பவிஷயங்களை யநுபவித்து அவற்றைப் பரக்கப் பேசித்திரிகிற ஸம்ஸாரிகளே! எம்பெருமானைப்பற்றிச் சிறிது சொல்லுங்கோள் என்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களை விளித்துச் சொல்லுகிறதாகவுங் கொள்ளலாம்
என் ஆவி ஆவிதனை-(இதுமுதல் எம்பெருமானுக்கு விசேஷணங்கள்) என் உயிர்க்கும் உயிராயிருப்பவன் என்றபடி. அதாவது-சரீரரத்தினுள்ளே ஆத்மா அந்தர்யாமியாயிருந்துகொண்டு அதனை எப்படி ஆள்கின்றானோ அப்படி அந்த ஆத்மாவிலுள்ளும் அந்தர்யாமியாயிருத்துக்கொண்டு, அவனையும் ஆள்பவன் பரமாத்மா என்றபடி.
எல்லையில்சீர்என்கருமாணிக்கச்சுடரை- அளவிறந்த திருக்கல்யாண குணங்களையும் நீலமணபோன்று குளிர்ந்தவடிவழகையும், நான் அனுபவிக்கும்படி அருள்புரிந்தவன் என்கை. நல்லவமுதம்-பரமபோக்யன் என்றபடி. சரீரரத்தை மாத்திரம் நோக்குகின்ற அம்ருதம்போலல்லாமல் ஆத்மாவையும் நோக்குகின்ற அம்ருதம் என்க.
பெறற்கு அரிய வீடும்ஆய்- பக்தியற்றவர்களுக்குப் பெறலாகாத மோக்ஷத்தையளிப்பபவன் என்று கருத்து. மோக்ஷதானத்திற்கு நிர்வாஹகன் என்னவுமாம். அல்லிமலர் விரையொத்து- தாமரைப்பூவின் பாரிமளம்போல் போக்யன் என்றபடி. ஆணல்லன் பெண்ணல்லன்- புருஷனாகையாலே ஸ்த்ரிகளிற் காட்டில் வேறுபட்டிருக்கிறாப்போலே, புருஷோத்தமனாகையாலே புருஷா;களிற் காட்டிலும் வேறுபட்டவன் என்றபடி. நாட்டிற்காண்கிற ஆணின் படியுமல்லன், பெண்ணின் படியுமல்லன்.
English Translation
My Lord of infinite goodness, my good ambrosia, is the rare bliss of liberation, sweet as the fragrant lotus flower. My Lord of black gem lustre, my soul’s keeper, is neither male nor female. Oh, How shall I speak of him?
