(3051)
ஏழைபேதை யிராப்பகல், தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.
பதவுரை
| கிளர் |
– |
விஞ்சின |
| வாழ்வை |
– |
(இராவணனது) செல்வம் |
| வேவ |
– |
நீறாகும்படி |
| இலங்கை |
– |
லங்காபுரியை |
| செற்றீர் |
– |
அழித்தவரே! |
| எழை பேதை |
– |
எழையும் பேதையுமான இவள் |
| இரா பகல் |
– |
இரவும் பகலும் |
| தன |
– |
தன்னுடைய |
| கேழ் இல் |
– |
ஒப்பற்ற |
| ஒண் கொண்டாள் |
– |
நீரைக்கொண்டாள்; |
| இவள் |
– |
இவளுடைய |
| மாழை நோக்கு ஒன்றும் |
– |
இளநோக்கு ஒன்றையுமாவது |
| வாட்டேன் மின் |
– |
வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக்கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர்நோக்கிக்கொள்ளவேணுமென்று பிரார்த்திக்கின்றாள். ஏழை–ஸூலபமான வஸ்துக்களிற்போலே துர்லபமான வஸ்துக்களிலும் ஈசைவைக்குமவள் என்றபடி. பேதை-‘இது நமக்கு துர்லபம்’ என்றறிந்தாலும் ஆசையை விடமாட்டாத இளம்பருவமுடையவளென்கை. ஆத இப்படிப்பட்ட இவள் இரவும் பகலும் கண்ணுங் கண்ணீருமுர்க இருக்கின்றாள். (தாமைரையிலே முத்துப்பட்டாற்போலே இக்கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற விருப்பபைக் காட்டிலெறித்த நிலாபவாக்காமல் நீர்ஒடிவந்து காணவேண்டாவோ? “ஆஹ்லாத ஸர்வதேஹிபி; புலகீக்ருத காத்ரவாந், ஸதா பரகுணவிஷ்ட; பண்ணின த்ருஷி பலித்த் வளவிலே வந்து அநுபவியாதே உவேக்ஷையாயிருக்கலாமோ? என்பது உள்ளுறை.)
அவளிடம் நாம் வந்து கலப்பதற்கு ப்ரதிபந்தகங்கள் கனக்கவுண்டே என்கிறீரேல், இராவணனிலும் வலிதோ இவளுடைய விரோதி வாக்கம்? அவனுடைய ஐச்வர்யமெல்லாம் நீறாகும்படி இலங்கையைப் பாழாக்கினீர்; ஒன்றை அழிக்க நினைத்தால் கிழங்குகூட மிகுந்திராதபடி அழிக்குமாவராயிருக்கின்றீர்; அப்படியே இவளையும் அழிக்க நினைக்து விட்டீரோ? எவ்வளவு அழித்தாலும் இவளுடைய கண்ணழகை மாத்திரமாவது குலையாமே நோக்கி யருளவேணு மென்கிறாள் உயிர்போகாதபடி நோக்கிக் கொள்ளவேணுமென்கை.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி;–“இவள்தானே முடிந்து போகிறாள், நாங்கள் தானே இழக்கிறோம், ஜீவிக்கவிருக்கிற நீர்வேணுமாகில் உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும்” என்பதாம்–“வண்டார்பூமாமலர்மங்கை மணநோக்கமுண்டானே” என்று பிராட்டியின நோக்கமே எம்பெருமானுக்கு உணவாகச்சொல்லப்பட்டிருப்பதால் “உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும்” என்று நம்பிள்ளை யருளிச்செய்தது இன்சுவைமிக்க பொருள்.
English Translation
This poor girl stands by night and day with tears we welling in her eyes. O Lord who destroyed Lanka’s fabulous wealth, pray spare her innocent looks at least!
