(3036)

(3036)

சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,

தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,

சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்

கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே.

 

பதவுரை

சேர்ந்தார்

பக்தர்களினுடைய

தீ வினைகட்கு

கொடிய பாவங்களுக்கு

அரு நஞ்சை

ஆற்றவாரிதான விஷமாயிருப்பவனும்

திண் மதியை

திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும்

நீர்ந்தார்தம் மனத்து பிரியாது

தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல்

அவர் உயிரை

அவர்களுக்கு உயிராயிருப்பவனும்

சோர்ந்து போகல் கொடா

தன்னைப் பிரிந்து விஷயங்களில் போகக்கொடாத

சுடரை

ஒளியுருவாகவுள்ளவனும்

அரக்கியை

ராக்ஷஸியான சூர்ப்பணகையினது

மூக்கு

மூக்கை

ஈர்ந்தாயை

அறுத்தவனுமாகியவுன்னை

அடியேன்

நான்

முதல் முன்னமே

அநாதிகாலமாக

அடைந்தேன்

சேரப்பெற்றவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் எம்பெருமானைப்பெற்றது இன்றைக்கோ? இவ்வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார்.  நெடுநாளாகப்  பிரிந்திருந்த பிரிவின்  வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின்.

சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சை=அடியார்களின் பாவங்களை முடிப்பவன் என்றபடி. சாஸ்த்ரங்களில் பாவங்களைப்பற்றி இரண்டு வகையாகச் சொல்லியிருக்கிறது  நாபுக்தம் க்ஷரியதே தர்ம கல்பகோடிசதைரபி என்று, பலனை அனுபவித்தே பாவங்களைத் தொலைக்க வேண்டுமென்பது ஒருவகை.  ப்ரஹ்மவித்துக்குப் பாப ஸம்பந்தம் அறவேயொழிந்துபோமென்பது மற்றொருவகை. எம்பெருமானை அடிபணியாதவர்கள் முதல்வகைக்கு இலக்கு  அடிபணியுமவர்கள் இரண்டாவது வகைக்கு இலக்கு என்பது = பாஸ்யஸித்தாந்தம். இவ்வர்த்தம் விளங்குமாறு இங்கு சேர்ந்தார்தீவினைகட்கு எனப்பட்டது.

திண்மதியை ஸ்ரீ த்ருடமான அத்யவஸாயத்தை அளிப்பவன் என்று பொருள். திருநெடுந்தாண்டகத்தில் முதற்பாட்டில் வேதநான்காய் என்றதற்கு நால்வேதங்களையும் கொடுப்பவன் என்று பொருளாவதுபோல இங்கும் திண்மதியை யென்பதற்குத் திண்மதியைக் கொடுப்பவன் என்று பொருளாகக் குறையில்லையென்றுணர்க. இங்கே ஒரு இதிஹாஸமருளிச்செய்வர்; –முன்பு அம்பாரி‘ன் எம்பெருமானை நோக்கித் தவம்புரியா நிற்கையில் அவனுடைய அத்யவஸாயத்தைப் பாரிக்ஷக்கும் பொருட்டு எம்பெருமான் இந்திரன் வேடம் பூண்டு எதிரே வந்து நின்று ‘வேண்டும் வரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்’ என்று சொல்ல அதுகேட்ட அம்பாரி‘ன் ‘இந்திரனே! நான் உன்னை ஆராதிக்குமவனல்லேன்  என்னுடைய ஸமாதி பங்கம் பண்ணாதே போகமாட்டாயோ? உன்னைக் கும்பிடுகிறேன், போ”  என்றானாம்.  த்ருடாத்யவஸாயம் இப்படியிருக்குமென்று காட்டினபடி.

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவருயிரைச் சோர்ந்தேபோகல் கொடாச் சுடரை = எம்பெருமான் தன்னையே உபாயமும் உபேயமுமாகப் பற்றியிருப்பவர்கள் தீர்ந்தார் எனப்படுவர்  அன்னவர்களினுடைய மனத்திலே எப்போதும் ஸந்நிதிபண்ணியிருந்து அவர்களது உயிரைக் குணாநுபவம் முதலியவற்றால் தாரிப்பிக்குமவன் என்னவுமாம்.

அடியேன் முதல் முன்னமே அடைந்தேன் = ஒரு மாணிக்கம் சேற்றிலழுந்தி மழுங்கிக் கிடக்க, அதனைப் பாரிஷ்காரித்தால் இயற்கையாகவுள்ள ஒளி விளங்குவது தவிர புதிதாகவொளி உண்டாவதன்றே  அதுபோலவே ஆத்மாவுக்கும் “திருமாலே! நானுமுனக்குப் படிவடியேன்” என்றபடி பகவத்ஸம்பந்தம் ஸ்வதஸ்ஸித்தமர்தலால் இங்ஙனே சொல்லக்குறையில்லையென்க

 

English Translation

O, Rare antidote for Karmas!  O Medicine for devotion, inseparable from the hearts of seers! O The glow which lights their souls! I have attained the Lord long ago.  He cut the nose of Surpanakha.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top