(2994)

(2994)

நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,

ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,

பூவியல் நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,

காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே.

 

பதவுரை

நாவினுள் நின்று

நாவினிடத்தில் நின்றும்

மலரும்

பரவுகின்ற

ஞானம் கலைகளுக்கு எல்லாம்

ஜ்ஞானஸாதனமான எல்லாக் கலைகளினுடையவும்

ஆவியும் ஆக்கையும் தானே

உயிரான அர்த்தமும் உடம்பான சப்தமும் தானிட்ட வழக்காம்படியிருப்பவனும்

அழிப்போடு அளிப்பவன் தானே

(அவற்றினுடைய) உத்பத்தி விநாசங்களும் தானிட்ட வழக்காம்படியிருப்பவனும்

பூ இயல் நால்

பூமாறாத நான்கு பெரிய திருத்தோள்களையுடையவனும்.

பொருபடை ஆழிசங்கு ஏந்தும்

(அத்திருத்தோள்களில்) போர்செய்கின்ற ஆயுதங்களாகிய திருவாழிதிருச்சங்குகளைத் தரித்திருப்பவனும்.

காவி நல்மேனி

கருநெய்தல் போன்று அழகிய திருமேனியையுடையவனும்

கமலம் கண்ணன்

செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையனுமாகிய எம்பெருமான்

என் கண்ணின் உளான்

(இவ்வழகோடே) எனது கண்ணுக்குள்ளேயானான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலைகளெல்லாவற்றாலும் காணவேண்டியவனான எம்பெருமான் ப்ரமாணங்களாலே காணக்கடவதான தன் வடிவை என் கட்புலனுக்கு இலக்காக்கினானென்கிறார். சாஸ்திரங்கள் யாவும் ஞானத்திற்கு ஸதானமாக அவதரித்தவையாதலால் ஞானக்கலைகள் எனப்பட்டது. அப்படிப்பட்ட சாஸ்திரங்களெல்லாம் நாவின் நுனியில் மலர்வனவாதலால் “நாவினுள் நின்று மலரும் ஞானக்கலைகள்” எனப்பட்டது.

ஆவியும் ஆக்கையுந்தானே = ஆவியாவது உயிர்; ஆக்கையாவது உடல். உலகில் ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடியது உடல்; அதனுள்ளே உறைந்திருப்பது உயிர்; அதுபோலே இங்கு. சப்தம் ஆக்கையாகவும் அர்த்தம் ஆவியாகவும் கொள்ளுதற்குரியது. ‘இன்ன சப்தத்திற்கு இன்னது அர்த்தம்’ என்று ஸங்கேதம் செய்துவைத்தவன் எம்பெருமான் யாதலால் சப்தார்த்த ஸம்பந்தம் தானிட்ட வழக்காயிருக்கப்பெற்றவனென்றவாறு.

அழிப்போடு அளிப்பன்தானே = உலகங்களினுடைய உத்பத்தி விநாசங்கள் எம்பெருமானிட்ட வழக்கு என்கிற அர்த்தமன்று இங்கு விவக்ஷிதம்; கீழ்ச்சொன்ன ஞானக்கலைகளைப் பிரவர்த்திப்பிக்கின்றவனும் அவனே  , உபஸம்ஹரிக்கின்றவனும் அவனே என்றபடி, இங்கே நம்பிள்ளையீடு: “மந்தமதிகளான சேதநருடைய ப்ரதிபத்தி தோஷங்களாலும் லேககதோஷங்களாலும் பாடபேதங்களாலும் இவை உருமாயுமளவிலே ஸம்ஹரித்தும், அபேக்ஷித ஸமயதிலே ஸ்ருஷ்டித்தும் போருகிறான்தானே. அல்லாத ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைச் சொல்லுகிற தென்பாருமுண்டு.”

(பூவியல் இத்யாதி.) புஷ்பஹாஸ ஸுகுமாரனாய், சதுர்ப்புஜனாய், சங்க சக்ரகதாகரனாய், இந்தீவர தளச்யாமனாய்ப் புண்டரீகாக்ஷனாயிருந்தவன் என் கண்ணுக்குள்ளே புகுந்தருளினானாயிற்று.

 

English Translation

In the wisdom of all the arts that blossom from the tongue, he is their letter and spirit; protector and destroyer too are him.  Petal-soft, four-armed Lord with battle-fierce discus and conch, the lotus-eyed Lord is in my eyes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top