(299)

(299)

குமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி

தமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி

அமரர் பதியுடைத் தேவி அரசாணி யைவழி பட்டு

துமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ.

பதவுரை

குமரி மணம் செய்து கொண்டு

கன்னிகை யவஸ்தையிற் செய்யவேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து
கோலம் செய்து

(ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து
இல்லத்து

விவாஹமந்திரத்தில்
இருத்தி

உட்காரவைத்து
தமரும்

பந்துவர்க்கங்களும்
பிறரும்

மற்றுமுள்ள உதரஸீநர்களும்
அறிய

அறியும்படி
தாமோதரற்கு என்று சாற்றி

“(இவள்) கண்ணபிரானுக்கு (க்கொடுக்கப்பட்டாள்) என்று சொல்லி,

(பிறகு)

அமரர் பதியுடைய தேவி

தேவாதி தேவனான கண்ணபிரானுக்கு மனைவியாகப் பெற்ற என் மகள்

(ஜாதிக்குத்தக்க ஒழுக்கமாக)

அரசாணியை

அரசங்கிளையை
வழிபட்டு

பிரதக்ஷிணம் பண்ண
துமிலம் எழப் பறைகொட்டி

பேரொலி கிளம்பும்படி பறைகளை முழக்கி
தோரணம் நாட்டிடும் கொல் ஓ

மகா தோரணங்களை (ஊரெங்கும்) நாட்டி அலங்கரித்துக் கொண்டாடுவர்களோ?.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான், தன்மகளைக் கிறிசெய்து கொண்டுபோனமையை பற்றி சிந்தித்துப் பயனில்லையென்று அச்சிந்தையை விட்டிட்டு, புக்ககத்துத் தலைவர்கள், இவளுக்கு விவாஹாங்கமாகச் செய்யவேண்டிய தோழிப் புழுங்கல் முதலிய மங்கள காரியங்களை அடைவுபடச்செய்து சீர்மைகுன்றாமல் அலங்காரங்களையும் அமைத்து, மணமாளிகையில் ஸகல ஜனங்களையும் அழைத்து விதிப்படி “இவளைக் கண்ணனுக்குத் தேவியாகத் தருகிறோம்” என்று வெளிப்படையாகச் சொல்லி, பிறகு விவாஹகாலத்தில் சாதிக்கேற்ற ஆசார முறைமையின்படி அலங்கார பீடத்தின்மேல் நாட்டும் அரசங்கிளையை இவள் வலம் வரும்படி செய்வித்து,    *****   ஊரெங்கும் அலங்கரித்து இவ்வகைகளால் கொண்டாட்டமுங் கோலாஹலமுமாக இருப்பார்களோ? அன்றி, கொண்டாட்டம் ஏதுக்கு? என்று உபேக்ஷித்திருப்பர்களோ? என்று ஸந்தேஹிக்கிறாள். “அரசாணியை வழிபட்டு” என்றது-மற்றுமுண்டான சாதித் தொழில்களுக்கெல்லாம் உபலக்ஷணமென்க.தேவி-****.  துமிலம்-பேராரவாரம். தோரணம்-வடசொல்.

English Translation

Will they deck her, seat her in the hall, and make it known to relatives and friends that she weds Damodara? Then as Queen to the Lord of gods, after she goes round the sacred fig branch, to the tumultuous beat of drums and flutter of festoons everywhere, will they celebrate her marriage properly? O, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top