(2987)
இவையும் அவையும உவையம் இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியுமாக்கியுங்காக்கும்
அவையுள் தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம்
சுவையன் திருவின்மணாளன் என்னுடைச் சூழலுளானே.
பதவுரை
|
இவையும் |
– |
ஸமீபத்திலுள்ள பொருள்களும் |
|
இவையும் |
– |
நடுத்தரமாகவுள்ள பொருள்களும் |
|
இவரும் |
– |
ஸமீபத்திலுள்ள சேதநர்களும் |
|
அவரும் |
– |
தூரத்திலுள்ள சேதநர்களும் |
|
உவரும் |
– |
நடுத்தரமாகவுள்ள சேதநர்களும் |
|
யவையும் |
– |
ஸகல அசேதனங்களும் |
|
யவரும் |
– |
ஸகல சேதனர்களும் (பிரளய காலத்தில்) |
|
தன்னுள்ளே |
– |
தனக்குள்ளே |
|
ஆகியும் |
– |
ஆகும்படி வைத்தும் |
|
காக்கும் |
– |
ரக்ஷித்தும் போருகிறவனும் |
|
அவையுயும் |
– |
தூரத்திலுள்ள பொருள்களும் |
|
அவையுள் |
– |
அந்த சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியானவனும் |
|
தனிமுதல் எம்மான் |
– |
ஒப்பற்ற காரணபூதனும் அஸ்மத் ஸ்வாமியும் |
|
கண்ணபிரான் |
– |
கண்ணனாக அவதரித்து ஸௌலப்யத்தைக் காட்டினவனும் |
|
என் அமுதம் |
– |
எனக்கு அம்ருதம்போல் பரம போக்யனும் |
|
சுவையன் |
– |
ரஸிகனும் |
|
திருவின் மணாளன் |
– |
பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள் |
|
என்னுடை சூழல் |
– |
என்னுடைய சுற்றுப்பக்கத்தில் |
|
உளான் |
– |
தங்கியராநின்றான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஜகத்காரணபூதனும் ஸர்வாந்தர்யாமியும் திருமகள் கொழுநனுமான கண்ணபிரான் என்னுடைய சூழலைவிட்டுப் போகமாட்டாதபடியானா னென்கிறார். உயர்வறவுயர்நலமென்கிற முதல் திருவாய்மொழியில் “நாமவன்” என்கிற நாலாம்பாட்டிற் சொன்ன சேதநாசேதங்கள் இப்பாட்டில் திரளத் தொகுக்கப்பட்டுள்ளன; அப்பாட்டினுரையில் விரியக்கண்டு கொள்வது. ஆக இப்படிப்பட்ட சேதநாசேதந வர்க்கங்களெல்லாம் ஸம்ஹார ஸமயத்திலே தன்னுள்ளேயாம்படியாயும் ஸ்ருஷ்டி ஸமயத்திலே உண்டாக்கியும், ஸ்ருஷ்டிக்கப்பட்டவற்றுக்கு நேரும் ஆபத்துக்களைப் போக்கி அபிமதங்களைக் கொடுத்து ரக்ஷிக்குமவனாய் அவற்றினுள்ளே அந்தராத்மாவாய் வேறொரு ஸஹாயத்தையு மபேக்ஷியாத காரணமுமாய் ஸ்வாமியுமாய், கண்ணபிரானான எளிமையைக்காட்டி எனக்குப் பரம போக்யபூதனாய் ரஸிகனான எம்பெருமான் பிராட்டியோடுகூட என்னுடைய சூழலிலே ஆனான்.
சுவையன் திருவின்மணாளன் = சுவையனாகையாலே திருவின் மணாளனானான்; திருவின் மணாளனாகையாலே சுவையனானான் என்று யோஜித்து உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர். ரஸிகனாகையாலே பிராட்டி *அகலகில்லேனிறையுமென்று இணைபிரியாதிருக்க ப்ராப்தமாயிற்று; பிராட்டி அணையப் பெற்றதனால்தான் ரஸிகனானான என்று பரஸ்பர ஸாபேக்ஷத்வம் கூறி யோஜிப்பது மிக அழகியதே.
English Translation
The Lord is first-cause of all things and beings everywhere, he contains all in himself, then makes them again and protects them, My Lord, my ambrosia, the taste of sweetness, is the spouse of Lakshmi, He has entered my Vicinity.
