(2980)
வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான்,
பொய்கலவாது, என் – மெய்கலந்தானே.
பதவுரை
|
வைகலும் |
– |
எப்போதும் |
|
வெண்ணெய் |
– |
வெண்ணெயை |
|
கை கலந்து |
– |
கை உள்ளளவும் நீட்டி |
|
உண்டான் |
– |
(வாரியெடுத்து) அமுது செய்தவன் |
|
பொய்நல வாது |
– |
மெய்யாகவே |
|
என் மெய் |
– |
எனது மேனியிலே |
|
கலந்தான் |
– |
ஒன்றுபடக்கூடினான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் எம்பெருமானது திருக்குணத்தையே விரும்புவதுபோல அவனும் என்னுடைய சரீரத்தையே விரும்பாநின்றானென்கிறார். இப்பாட்டில் பின்னடிகளே முக்கியமானவை; அதிற்சொல்லும் விஷயத்திற்கு த்ருஷ்டாந்தம் காட்டுவன முன்னடிகள். திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருக்கிறதோ அவ்வளவு போக்யாமயிருந்தது என்னுடைய சரீரமவனுக்கு என்றவாறு.
பொய்கலவா = அவப்தஸமஸ்தகாமனும் அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனுமான ஸர்வேச்வரன் உம்முடைய அழுக்குடம்பிலே கலந்தானென்றால் இது நம்பத்தகுந்ததோவென்று சிலர் ஸந்தேஹிக்கக்கூடுமென்று கருதி ஸத்யமிட்டுச் சொல்லுகிறார்போலும்.
English Translation
Without a doubt the Lord who stole butter, and ate with both hands, is blended in me.
