(2975)

(2975)

குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,

அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,

மிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,

உடைந்து நோய்களை யோடு விக்குமே.

 

பதவுரை

வண்டு

வண்டுகள்

குடைந்து

உட்புகுந்து

உண்ணும் துழாய்

மதுவுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையை

முடியானை

திருமுடியிலணிந்த பெருமானை

அடைந்த

பணிந்த

தென் குருகூர் சடகோபன்

திருநகரியிலவதரித்த ஆழ்வாருடைய

மிடைந்த சொல் தொடை ஆயிரத்து

நெஞ்கின சொல்மாலையாகிய ஆயிரத்தினுள்ளே

இ பத்து

இந்தத் திருவாய்மொழி

நோய்களை உடைத்து ஓடு விக்ரும்

ப்ராப்திப்ரதி ப்ந்தகங்களை உருக்குலைந்து ஓடும்படி செய்திடும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது. மதுவைப் பருக வேணுமென்று இழிந்த வண்டுகளானவை பெருக்கடலிலே விழிந்தாற்போலே உள்ளேயுள்ள இடங்கொண்டு புஜிக்கும்படியாக மதுவெள்ளம் நிறைந்த திருத்துழாய்மாலையையணிந்த திருவபிஷேகத்தையுடையனான எம்பெருமானைபடி பணிந்த நம்மாழ்வார் அருளிச்செய்த சொற்பொழிவு வாய்ந்த இத்திருவாய்மொழிதானே நோய்களை உடைந்தோடும்படிபண்ணும் என்றதாயிற்று.

 

English Translation

This decad of the thousand sweet songs by kurugur satakopan, on attaining the Lord who wears the nectared Tulasi wreath humming with bees, provided a cure for sickness and disease.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top