(2964)

(2964)

மாதவன் பால்சட கோபன்

தீதவ மின்றி யுரைத்த

ஏதமி லாயிரத் திப்பத்து

ஓதவல் லார்பிற வாரே.

 

பதவுரை

சடகோபன்

ஆழ்வார்

மாதவன் பால்

லக்ஷ்மீநாதனான எம்பெருமான் பக்கலில் (பக்தியுந்தாராய்)

தீது அவம் இன்றி உரைத்த

தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லையென்பதை யெடுத்துரைத்த

ஏதம் இல் ஆயிரத்து

வழுவற்ற இத்திருவாய் மொழியாயிரத்தில்

இ பத்து

இப் பத்துப்பாசுரஙக்ளையும்

ஓத வல்லார்

(குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள்

பிறவார்

மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.

இப்பாட்டில், தீது அவம் ஏதம் என மூன்று சொற்கள் உள்ளன; குற்றம் என்பதே மூன்றுக்கும் பொருள். மூன்று விஷயங்களுக்குக் குற்றமில்லாமை சொல்லப்படுகினறது; அதாவது- கவிபாடுகிற தமக்கும் பாட்டுண்கிற எமபெருமானுக்கும் இக்கவிகளுக்குஞம் ஒரு தீங்குமில்லாதபடி மாதவன் பாற் சடகோபனுரைத்த ஆயிரம் என்பதாக. ப்ராமாணமாகிய இத் திருவாய்மொழியும் ப்ரமேயனான எம்பெருமானும் ப்ரமாதாவான ஆழ்வார் தாமும் குற்றமற்றிருக்கின்றமையைச் சொன்னவாறு. இது ஆறாயிரப்படியில் பிள்ளான் அருளிய நிர்வாஹம்.

இங்கே பட்டர் விலக்ஷணமாக அருளிச்செய்வாராம்: எங்ஙனேயன்னில் ஏதமிலாயிரர் என்று இப்பிரபந்தத்தைக் குற்றமற்றதாகச் சொன்னபோதே ப்ரபந்த ப்ரதி பாத்யனுக்கும் ப்ரபந்தவக்தாவுக்கும் குற்றமில்லாமை சொன்னதாகவேதறிவிடும்; ‘அவை தனிப்படச் சொல்லவேண்டா; ஆகவே “நீதுஅவம் இன்றி” என்பேதற்கு வேறு தாற்பரிய மிருக்கத்தகும்; அதாவது- “மாதவன் பால் தீதவமின்றி தன்னுடைய மேன்மையைப் பார்த்து ஆச்ரிதர்களைக் கைவிடுதல், ஆச்ரிதர்களின் நீசத்தன்மைகளைப் பார்த்துத் தான் ஒதுங்கிநிற்றல் என்கிற இவ்விரண்டு குற்றங்களும் எம்பெருமானுக்கு இல்லையென்பதைச் சொன்னவிப்பத்து என்க. ‘எம்பெருமான் ஆராதனைக்கு எளியன்’ என்று சொன்னதுதான் இது.

 

English Translation

This decad of the faultless thousand by pure-hearted Satakopan addressing the perfect Madava secures freedom from rebirth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top