(2876)

(2876)

பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே

உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்

கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்

பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே.

 

பதவுரை

பற்றா மனிசரை பற்றி

உபயோகமற்ற மநுஷ்யர் களைப்பற்றி

அப் பற்று விடாது

அந்தப் பற்றுதலை விடாமல்

அவரே உற்றார் என

அவர்களையே உறவினராகக்கொண்டு

உழன்று

அவர்கள் பினனே அலைந்து

ஓடி

அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி

இனி நையேன்

இனிமேல் துவள மாட்டேன்;

ஒள்ளிய நூல் கற்றார்

சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே

பரவும்

கொண்டாடப்படுகிற

இராமாநுசனை

எம்பெருமானாரை

கருதும் உள்ளம் பெற்றார் யவர்

அநுசந்திக்கும்படியான நெஞ்சையுடையோர் யாவரோ,

அவர்

அநா மஹான்களே

எம்மை

நம்மை

நின்று ஆளும் பெரியவர்

சாசவதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.

ஒள்ளிய நூல்

“சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.

 

English Translation

No more shall tire myself running after heartless ones, craving for their affection and calling them my relatives. Those whose hearts are pure, who study the sacred texts and who worship Ramanuja –they alone are my masters, I worship them.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top