(2765)-(2766)

…………    …………        ……………ஆயிரங்கண்

 

மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னுலகும்,

தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை

பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,

கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, – வல்லாளன்  (2765)

 

மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீ ர்த்து,

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, – அவனுடைய      (2766)

 

பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த

மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,

 

பதவுரை

ஆயிரம் கண் மன்னவன் வானமும்

ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும்

வானவர் தம் பொன் உலகும்

(மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்

தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை

தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை

பின்

சிறிது காலம் பொறுத்து

ஓர் அரி உருவம் ஆதி

ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து

ஏரி விழித்து

நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து,

கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே

கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே

வல்லாளன்

மஹாபலசாலியான அவ்வசுரனுடைய

மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து

மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து

தன்னுடைய தாள் மேல் கிடாத்தி

(அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு

அவனுடைய பொன் அகலம்

அவனது அழகிய மார்பை

வள்  உதிரால் போழ்ந்து

கூர்மையான நகங்களாலே பிளந்து

புகழ் படைத்த

(ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய்

மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை

மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தானவன் –அரசன், வடசொல். கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே – தூணில் நின்றும் தோன்றியனவுடனே திருகண்ணாலே அவனைக் கொளுத்திவிடலாம், “ஆச்ரிதனான ப்ரஹ்லாத்தன் விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி வள்ளுகிரால் போழ்ந்து – தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி இரணியன் வரம்பெற்றிருந்தானாதலால் அந்த வரம் பழுதுபடாதபடி அவனைப் பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களாலே பிளந்தருளின்ன்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top