(2648)

(2648)

பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,

உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்

றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்

கைதான் தொழாவே கலந்து.

 

பதவுரை

அன்று

முற்காலத்தில்

மரம் ஏழ் எய்தானை

(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,

புள்ளின் வாய் சீண்டானை

பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி

அவன் பரன் ஆம் ஆதல்

‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை

உõனால்

தங்களுடைய மனத்தினாலே

பாவிப்பர் ஆகில்

அநுஸந்திப்பர்களேயானால்

(அப்படிப்பட்ட விவேகிகளை)

அமரர் கை

தேவர்களின் கைகளானவை

கலந்து

ஒன்றுசேர்ந்து

ஒரு மூன்று போதும்

எப்போதும்

தொழாவே

ஸேவிக்க மாட்டாவோ.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பரனாமவனாதல்.) கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்யஸஜாதீயனாய்ப்பிறந்து “உங்களைப்போலே நானும் ஒரு மநுஷ்யனே” என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி ‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், *** = அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்” (நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்; அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும் கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.

உரனால் = ‘உரஸ்’ என்னும் வடசொல் மார்வுக்கு வாசகமாய் நெஞ்சையும் சொல்லக்கடவது; அச்சொல் உரம் எனத் திரிந்து; மகானகரப் போலியுண்டாகையாலே உரன் என்று கிடக்கிறதிங்கு எதுகையின்பம் நோக்கி, இங்ஙனன்றிக்கே உரம் என்று தனியே ஒரு தமிழ்ச் சொல்லுமுண்டு; அதற்கு வலி என்று பொருள்; இங்கு அத்யவஸாயத்தைச் சொன்னபடி ‘அவன் பரமபுருஷனேயென்று உறுதியாகப் பாவித்திருப்பர்களாகில்’ என்றபடி.

மரமேழன்றெய்தானை என்பதனால் ஸ்ரீராம வதாரத்தையும், புள்ளின்வாய்கீண்டயானை என்பதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையும் குறித்தது- மற்றும் இப்படிப்பட்ட பல விபாவாவதாரங்களையுங்காட்டினபடி “அமரர்கைதான் தொழாவே கலந்து” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது- ‘மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான் திறத்திலும் பரத்வபுத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’ என்று உரைத்தோம். மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகையாகவும் உரைக்கலாம்;- அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸம்ஸாரிகள் விபவாவதாரங்களிலெம்பெருமான்களை அலக்ஷிய் செய்யாமல் பரத்வத்தையே பாவித்துப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றோ? என்றுரைக்கவுமாம்.

மரமேழன்றெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை ஒரு போஜனை தூரம் தூக்கி யெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ற, ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புபோலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது; எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’ என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்காமறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலரா திருக்கையில். வாலி இதனைத் தூக்கியெறிந்தான்; இப்போது உலர்நதுபோன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின்மேல் ஏவ,அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலங்கங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அப்றாத் தூணியை அடைந்தது- (மராமரம்- ஆச்சாமரம்.)

புள்ஸின்வாய் கீண்ட வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தநினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக் கிழித்திட்டனன் என்பதாம்.

 

English Translation

If the gods had realised the transcendent Lord in the Avataras of Rama when he pierced seven trees, and Krishna when he tore apart the beaks of the bird-Asura Baka, would they not have offered flowers worship with folded hands thrice a day?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top