(2639)

(2639)

மருங்கோத மோதும் மணிநா கணையார்,

மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே

எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,

மனக்கவலை தீர்ப்பார் வரவு.

 

பதவுரை

வரவு

–

(தம்முடைய) வருகையினாலே

மனம் கவலை தீர்ப்பார்

–

(நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்

மழுங்கு ஓதம் மோதும்

–

ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)

மணி நாக அணையார்

–

மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.

மருங்கே வர அரியர் எலும்

–

(ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்

எமக்கு

–

நமக்கு

அவரை

–

அப்பெருமானை

உன்னால்

–

மனத்தினால்

ஒருங்கே

–

ஒரே தன்மையாக

எப்பொழுதும் காணலாம்

–

எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மருங்கோதமோதும்.) எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும், அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுகக்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால் எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.

“வரவு மனக்கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி. தானாகவே வந்து மனக்கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை ஓதம் மருங்கு மோதும் மணிநாகணையார் ஃதெண்திரை வருடத்திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு. இப்படிப்பட்ட பரமபுருஷன். மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்; உள்ளால் நமக்கு அவரைக் காணலாம் = என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக்காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று.

 

English Translation

The Lord reclines on a diademed serpent in the wave-lapping ocean.  He cannot come to us.  But we can see him well in our hearts at all times, and be relieved of worries.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top