(2544)
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே.
பதவுரை
| அசுரை |
– |
அசுரர்களை |
| செற்ற |
– |
அழித்த |
| மா விய புள் வல்ல |
– |
பெரிய ஆச்சர்யகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற |
| மாதவன் |
– |
திருமகன் கணவனும் |
| துணை மலர் |
– |
ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள் |
| காவியும் |
– |
செங்கழுநீர்ப் பூவையும் |
| நீலமும் |
– |
கருநெய்தற் பூவைய|ம் |
| வேலும் |
– |
வேற்படையையும் |
| பலபல |
– |
(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும் |
| கோவிந்தன் |
– |
பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய |
| வேங்கடம் |
– |
திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற |
| தூவி அம்பேடை அன்னான் |
– |
சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது |
| கண்கள் ஆய் |
– |
கண்களாகிய |
| வென்று |
– |
தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து |
| பாரிப்பு |
– |
என்னை வருத்துவதற்கு அடிகோலிய பரப்பு |
| ஆவியின் அல்ல |
– |
(எனது) உயிரின் தன்மைக்கு |
| அளவு அல்ல |
– |
ஏற்ற அளவல்ல. |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் தலைமகள் கழற்றெதிர் மறுத்துரைத்து வருந்துவதைக் கண்ட தோழன் ‘ஒருகாலும் கலங்க கடவதல்லாத உனது உள்ளம் இங்ஙனே கலங்குவதற்குக் காரணம் என்னோ?’ என்று தலைவனுக்குக் கூற, அதற்குத் தலைவன் தன் ஆற்றாமையுணர்த்தியதுஇது. யான் திருவேங்கட மலையிற் கண்ட மங்கையின் கண்கள் வருத்தத் தொடங்கிய அளவுக்கு என் உயிர் ஓர் ஈடாகாதென்று தலைமகன் தன் வலியிழந்தமையைப் பாங்கனுக்குக் கூறி வருந்துகிறானாயிற்று.
அசுரர்களையழித்த பெரிய ஆச்சரியகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற திருமாலின் திருப்பதியாகிய திருவேங்கட மலையிலே மலர்போன்ற கண்களானவை உத்தம லக்ஷணமாகிய ரேகைகளின் செம்மையால் செங்கழுநீரையும் கருநிறத்தால் நீலோற்பல மலரையும், கூர்மையாலும் ஒளியாலும் வருத்துதலாலும் வேலாயுதத்தையும், குளிர்ச்சியாலும் வடிவத்தாலும், கயல்மீனையும், மற்றும் மருட்சி முதலியவற்றால் மற்றுங் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய மிகப் பல பொருள்களையும் தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து என்றை வருத்துதற்கு அடிகோலிய பரப்பு எனது உயிரின் தன்மைக்கு ஏற்ற அளல்ல; உயிரின் அளவை மீறிக்கிடக்கின்றது: இந்த மெல்லிய உயிரை மாய்ப்பதற்கு இத்தனை பெரிய முயற்சி கொள்ளத் தேவையில்லை என்றவாறு.
ஸ்வாபதேசத்தில், ஆழ்வாருடைய ஞான விளக்கத்தைப் பாகவதர் அன்பர்க்கு எடுத்துரைத்தலாமிது. ‘அசுரைச் செற்ற மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடஞ் சேர்’ என்றதனால்- துஷ்ட நிக்ரஹசீலனும் கருடவாஹநாருடனும் உத்தமப்ரமாணப்ரதி பாத்யனும் புருஷகாரஞ் செய்பவளான திருமகளுக்கு வீசப்பட்டவனும் ஆத்மாக்களைப் பரிபாலிப்பவனுமான திருமாலினது போகஸ்தாநமான பெரிய திருமலையில் ஈடுபாடுடையவர் ஆழ்வார் என்பது விளங்கும். ‘வேங்கடஞ்சேர்” என்றது வேங்கடத்தை இடைவிடாது நினைப்பவரென்றவாறு. ‘தூவியம் பேடையன்னாள்’ என்றதனால்- ஆழ்வாரது சுத்த ஸ்வபாவமும் ஜ்ஞநா நுஷ்டாநரூபமான மேற்கதி செல்லுங் கருவியிரண்டையுமுடைமையும் பாரதந்திரியமும் குறிப்பிக்கப்பட்டன. ‘வேங்கடஞ் சேர்தூவியம்பேடை’ என்று அவர் மேல்மங்கைத் தாயாரைச்சொல்லி, அவளோடே இவருடைய ஸ்வரூபத்துக்கு ஒப்புச்சொல்லிற்றாகவுமாம். (கண்களாய துணைமலர்)தமக்கும் தம்மடியார்க்கும் துணையாகிற பரந்த ஞானவகைகளென்க. அந்த ஞானம் காவியை வென்றதாகச்சொன்னது செந்நிறத்தாகிய ரஜோகுணத்தைக் கடந்தமை சொன்னபடி. நீலத்தை வென்றதாகச் சொன்னது- கருநிறத்தான தமோகுணத்தைக் கடந்தமை சொன்னபடி, கயலை வென்றதாகச் சொன்னது- இப்படி முக்குணங்களையுங் கடத்தலால் ஜடபதார்த்தங்களிற் சேராமை சொன்னபடிவு; சஞ்சலத் தன்மையில்லாமை சொன்னபடியுமாம். இப்படிப்பட்ட ஞானத்தின் மஹிமைக்கு எம்மை வசப்படுத்திக் கொள்ளுதல் ஒரு பெரிதன்று என்றதாயிற்று.
‘அசுரரை’ என்பது ‘அசுரை’ எனத் தொகுத்தல் விகாரப்பட்டது. ‘வியப்புள்’ என்பது வியம்புள் என மெலித்தலாயிற்று.
English Translation
She is like a beautiful swan from the hills of Venkatam, the abode of the lord Madhava, Govinda, the bird rider who slays Asuras. Her perfectly matching eyes easily win over lotuses, blue waterlilies, speakers and fishes in their various ways. Her gaze is more than this soul can bear!
