(2471)
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்.
பதவுரை
|
விண் |
– |
பரமபதத்தில் |
|
வீற்றிருந்து |
– |
பெருமை பொலிய இருந்து |
|
ஆள வேண்டுவார் |
– |
ஆட்சிசெய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள் |
|
வேங்கடத்தான் பால் |
– |
திருவேங்கட முடையான் பக்கலில் |
|
பல் மலர்கள் |
– |
பலவகைப்பட்ட மலர்களை |
|
திருந்த |
– |
நன்றாக |
|
வைத்தாரே |
– |
ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை) |
|
வரும் மதி பார்த்து |
– |
(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து |
|
அன்பினர் ஆய் |
– |
பக்தியை யுடையவர்களாய் |
|
மற்றவற்கே |
– |
அந்த எம்பெருமானுக்கே |
|
தாழ்வு ஆய் இருப்பார் |
– |
அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு |
|
தமர் |
– |
அடிமைப்பட்டவர்கள் |
|
மேல் திருந்த வாழ்வார் |
– |
முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பாகவதராலே அங்கீகரிக்கப் பெறுமவர்கள் எல்லாரிலும் மேற்பட்டவர்களென்கிறார். எம்பெருமான் திருவடிகளில் மலர்களைத் தூவி அடிமை செய்தவர்களே விண்ணாள்பவர், ஆயினும், எம்பெருமானுக்கு அடிமையாயிருக்கின்ற பாகவதர்களால் ‘இவர்கள் நம்முடையவர்கள்‘ என்று அங்கீகரிக்கப்படுமவர்கள் முன்னடிகளிற் சொல்லப்பட்ட அதிகாரிகளிற் காட்டிலும் சிறந்து வாழ்வர் என்றாராயிற்று.
இரண்டாமடியின் முதலிலும் முடிவிலும் ‘திருந்த‘ என்னாதே ‘திருந்து‘ என்றே ஓதிவருமவர்களின் பாடம் மறுக்கத்தக்கது. வரும் மதிபார்த்து அன்பினராய் – எம்பெருமானுடைய திருவுள்ளக்கருத்தைப் பின் சென்று அன்பு கொண்டிருப்பவர்களென்கை.
English Translation
Those who wall to rule Vaikunta worship constantly the Venkatam lord offering flowers with clear mind, and cultivate love for all, humbling themselves before his devotees, who thus get the exalted life themselves.
