(2460)

(2460)

ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்

வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், – ஏய்ந்ததம்

மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்

வைகுந்தம் காண்பார் விரைந்து.

 

பதவுரை

ஆதி

ஜகத்காரணபூதனான

பெருமானை

ஸர்வேச்வரனை

அன்பினால்

ப்ரேமத்துடன்

ஆய்ந்து கொண்டு

அநுஸந்தித்துக் கொண்டு

வாய்ந்த மனத்து

(தமது) பாங்கான நெஞ்சிலே

இருத்த வல்லார்கள் தாமும்

நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்

தம் வைகுந்தம்

தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை

விரைந்து

சீக்கிரமாக

காண்பார்

காணவிரும்பமுடையராய்

ஏய்ந்த

ஆத்மாவோடு செறிந்த

தம்மெய்

தங்களுடைய உடம்பை

குந்தம் ஆக

வியாதியாக

விரும்புவர்

எண்ணுவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-   பகவத் விஷயத்தில் ருசிடையவர்கள் எம்பெருமானை யநுபவிப்பதற்கு ஏகாந்தமான பரமபதத்தை யடையவேணுமென்னும் விரைவினால் தத்விரோதியான தங்கள் சரீரத்தை வியாதியாகக் கொண்டு தங்களுடைய வாய்ந்தமனத்திலே அவனை இருத்தவேணுமென்னும் விருப்பமுடையவர்கள், தங்களுக்கென்றே ஏற்பட்டிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை ‘பெற்றபோது பெறுகிறோம்‘ என்று ஆறியிருக்கையன்றியே ‘கூவிக்கொள்ளுங் காலமின்னங்குறுகாதோ‘ என்று விரைந்தவராய்க்கொண்டு, ‘அதற்கு இடையூறாயிருக்கின்ற இவ்வுடல் என்றைக்குத் தொலையப்போகிறது!‘ என்று வியாதியைக் கழிக்க விரும்பிக் கிடப்பாரைப் போலே கிடப்பர்கள் என்றாராயிற்று.

“வடுக பாஷையில் குந்தமென்று வியாதிக்குப் பெயர்“ என்பது பூருவர்களின் வியாக்கியான வாக்கியம்.

 

English Translation

Those who contemplate the first-cause lord and offer their hearts with love to him, await to see the freedom of Vaikunta. For them their body is a source of bondage.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top