(2401)

(2401)

நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்

நீயே தவத்தேவ தேவனும் – நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்

திருசுடரு மாய இவை,

 

பதவுரை

உலகு எல்லாம் நீயே

உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,

நிற்பனவும்

உலகங்கள் ஸத்தைபெற்று நிற்பதும்

நின் அருளே

உனது கிருபையினாலேயாம்,

தவம் தேர் தேவனும் நீயே

தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,

எரி சுடரும்

ஜவுலிக்கின்ற அக்நியும்

மால்வரையும்

பெரியகுலபர்வதங்களும்

எண் திசையும்

எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்

அண்டத்து

ஆகாசத்திலுள்ள

இரு சுடரும்

சந்த்ர ஸூர்யர்களும்

ஆய இவை

ஆகிய இவையெல்லாம்

நீயே

நீயேகாண்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸகலமும் எம்பெருமானாகவே யிருக்கும்படியை யருளிச் செய்கிறாரிதில். “உலகெல்லாம் நீயே“ என்றது – உலகமெல்லாம் உன்னுடைய ஆளுகையில் அடங்கியுள்ளது என்றபடி. நிற்பனவும் நின்னருளே – அவ்வப்பொருள்கள் அழியாதே ஸத்தை பெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே. தவத் தேவ தேவனும் நீயே – எவ்வளவோ தவங்கள் செய்து ப்ரஜாபதி யென்றும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நீ;  யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றவாறு.

 

English Translation

O Lord! All the Universe is you, the sentient beings, are you.  The austerit-god Siva, and his god Brahma to, are you.  Fire, the mountains, the eight Quarters, the twin orbs, -all these are you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top