(239)

(239)

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்

படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே

கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின்

இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

என் பிள்ளையை

–

என் மகனாகிய கண்ணபிரானை
வெண்ணெய்

–

வெண்ணெயை
மிடறு

–

கழுத்திலே
மெழுமெழுத்து ஓட

–

(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி

–

விழுங்கி விட்டு
போய்

–

(பிறரகங்களுக்குப்) போய்
பலபடிறு

–

பல கள்ள வேலைகளை
செய்து

–

செய்து கொண்டு
இ பாடி எங்கும்

–

இவ்விடைச்சேரி முழுதும்
திரியாமே

–

திரியவொட்டாமல்
பலகடிறு திரி

–

பல காட்டானைகள் திரியப்பெற்ற
கான் அதர் இடை

–

காட்டு வழியிலே
இடற

–

தட்டித்திறியும்படியாக

கன்றின் பின் போக்கினேன் ;

எல்லே பாவமே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்கவேண்டுமானால் கல் உண்டோவென்று  சோதித்து மெதுவாகக் கடித்துண்ணவேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே; ஆகையால் அதனை விழுங்குவன் என்க. பலபடிறு செய்கையாவது கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;* பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறுகை. களிறு என்றசொல் எதுகையின்பம் நோக்கிக் கடிறு எனவந்தது; டகரப்போலி;  ///////// என்பார் வட நூலார்.

English Translation

My child would gulp butter down his throat and roam this cowherd settlement doing wicked things. Instead I sent him after the grazing calves, with faltering steps down the forest path, where did wild elephants roam. O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top