(2379)
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், – நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
பதவுரை
|
இமம் சூழ் மலையும் |
– |
பனியாலே சூழப்பட்டிருகிற இமயமலையையும் |
|
இரு விசும்பும் |
– |
பெரிய ஆகாயத்தையும் |
|
காற்றும் |
– |
வாயுவையும் |
|
அமம் சூழ்ந்து |
– |
(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து |
|
அற விளங்கி தோன்றும் |
– |
மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின |
|
துரகத்தை |
– |
குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை |
|
தொட்டு |
– |
திருக்கையால் பற்றி |
|
வாய் பிளந்தான் |
– |
(அவனது) வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான் |
|
நம்மை |
– |
நம்மை |
|
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான் |
– |
யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- க்ருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்டு மிகப்பெரிய குதிரைவடிவங் கொண்டு வந்த கேசி யென்னு மஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நாகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார். முன்னடிகளிரண்டும் அவ்வசுரக் குதிரைக்கு அடைமொழி. பருமனில் மலையைவென்றிருந்த்தாம், உய்த்தியில் ஆகாயத்தை அதிக்ரமித் திருத்ததாம், லோகத்தில் (அல்லது வலிமையில்) வாயுவை வென்றிருந்ததாம். ‘மலை‘ என்று பொதுவாகச் சொன்னால் போராதோ, ‘இமஞ் சூழ்மலை‘ என்று விசேஷித்துச் சொல்லுவானேன்? என்னில், ஸப்தகுலபர்வதங்களில் இமயமலை முதலிற் கண்கிடப் பட்டிருப்பதால் இதனை உபலக்ஷணமாகக் கொண்டு குலாசலங்களேழையுங் கொள்ளவேணு மென்பதற்காக வென்க.
அமஞ்சூழ்ந்து – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படாக, எனவே இவைற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். துரகம் – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி.
English Translation
He who protected the mountains, the skies, the winds and all else within himself will surely protect us from the travels all hell. He killed the horse kesin with his bare hands.
