(2343)

(2343)

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,

மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

 

பதவுரை

விண்ணகரம்

திருவிண்ணகரமும்

வெஃகா

திருவெஃகாவும்

விரி திரை நீர் வேங்கடம்

விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும்

மண் நகரம்

பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற

மா மாடம் வேளுக்கை

பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்

மண் அகத்த தென் குடந்தை

பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்

தேன் ஆர் திரு அரங்கம்

தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும்

தென் கோட்டி

தென் திருக்கோட்டியூரும் (ஆகிய இத்திருப்பதிகள்)

தன் குடங்கை

தனது உள்ளங்கையாலே

நீர் எற்றான்

(மாவலிபக்கல்) உதகதானம் பெற்ற பெருமான்

தாழ்வு

தங்குமிடங்களாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா திருமலை, ஆளழகிய சிங்கர்ஸந்நிதி‘ என்கிற கச்சித்திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில், திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று.

ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து – மஹாபலிபக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம்.

தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.

 

English Translation

The nectar-groves-surrounded srirangam, the Southern Tirukkottiyur, the beautiful kudandai, the mansioned velukkai, venka, Vinnagaram, -these are some other abodes of the Lord who took the Earth-gift in his palm, the Lord who resides in streaming-hills Venkatam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top