(2340)

(2340)

வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,

தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்

திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்

பெருமான் அடிசேரப் பெற்று.

 

பதவுரை

மை போல் நெடு வரை வாய்

மைபோன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே

தாழும்

இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற

அருவி போல்

அருவிபோலே

தார் கிடப்ப

மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)

சூழும்

ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற

திரு

பிராட்டியை யுடையவனும்

மா மணி வண்ணன்

நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்

செம் கண்மால்

செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான

எங்கள் பெருமான்

எம்பெருமானுடைய

அடி

திருவடிகளை

சேர பெற்று

அஞகப் பெற்றதனால்

வாழும் வகை அறிந்தேன்

உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய கரிய திருமேனியிலே செந்திறமான ரத்னங்களால் அமைந்த ஹாரங்கள் சாத்தப்பட்டிருப்பதானது அஞ்சனகிரியிலே அருவிகள் தாழ விழிந்தாற்போலே யிருக்கின்றனவாம். அவ்வழகிலே யீடுபட்டு அத்திருமார்பை ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாதே சூழ்ந்து கிடக்கிறாள் பெரிய பிராட்டி, அப்படிப்பட்ட செங்கண்மாலுடைய திருவடிகளை நான் சேர பெற்றதனால் ‘இதுவே நமக்கு உஜ்ஜீவம்‘ என்று துணிந்தேன். இனி விஷயாந்தரங்களில் அவகாஹித்துக் கெட்டுப்போக மாட்டேன் என்றாராயிற்று.

மலையருவிகள் வெண்ணிறமாகவும் பெருகுவதுண்டு, அங்குள்ள தாதுக்களுடன் கூடிச் செந்நிறமாகவும் பெருகுவதுண்டு, இங்கே ‘அருவிபோல்தார் கிடப்ப‘ என்று பொதுப்படையாகக் கூறியிருப்பதனால் எதையேனுங் கொள்ளலாம். வெண்ணிறமான அருவியென்றால் அப்போது தார் என்றது முக்தாஹாரத்தைச் சொன்னபடியாம், செந்நிறமான அருவியென்றால் மாணிக்கங்களழுத்தின ஹாரத்தைச் சொன்னபடியாம்.

“எங்கள் பெருமானடி சேரப்பெற்ற வாழும்வகையறிந்தேன்“ என்று அந்வயம்.

 

English Translation

Bright rivulets flowing down venkatam make the dark hill look like the radiant sri-graced gem-hued lord senkanmal with strings, of bright pearls over his chest. Attaining his feet, I have learnt to live again.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top