(2307)

(2307)

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,

நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும்,

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,

தாம்கடவார் தண்டுழா யார்.

 

பதவுரை

தண் துழாயார் தாம்

குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்

கடவார்

ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க்கொண்டு

உறைந்ததுவும்

நித்யவாஸம் பண்ணுமிடங்கள் (எவையென்றால்)

சிறந்த என் சிந்தையும்

சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்

செம் கண் அரவும்

சிவந்த கண்களையுடைய திருவனந்தாழ்வானும்

நிறைந்த சீர்

நிறைந்த செல்வத்தையுடைய

நீள்

பெரிய

கச்சியுள்ளும்

கச்சித்திருப்பதியும்

வேங்கடமும்

திருமலையும்

வெஃகாவும்

திருவெஃகாவும்

வேளுக்கைப் பாடியுமே

திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தண்டுழாய்மாலை யணிந்துள்ள எம்பெருமான் என் சிந்தையோடு திருவனந்தாழ்வானோடு கச்சிப்பதியோடு திருவேங்கடமலையோடு திருவெஃகாவோடு திருவேளுக்கையோடு வாசியற இவ்விடங்களில் திருவுள்ளமுவந்து வாழ்கிறனென்கிறார். எம்பெருமான் விரும்பி மேல்விழுவதற்கு உறுப்பானதம் சிந்தைக்கு, ‘சிறந்த‘ என்று அடைமொழி கொடுத்தது பொருந்தும்.

இப்பாசுரத்திற்கு இரண்டு மூன்று வகையாக யோஜநைகள் அருளிச் செய்வதுண்டு, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற் காண்க.

வெஃகா – யதோக்தகாரி ஸந்நிதி, வேளுக்கை – ‘காமாஸிகா‘ என்ற திருநாமத்தால் வழக்கப்படுகிற ஆளழகிய சிங்கப்பெருமாள் ஸந்நிதி. இவ்விரண்டு தலங்களும் கச்சிப்பதியிலுள்ளன. ‘வேளுக்கைப்பாடி‘ என்றதை இரண்டாகப்பிரித்து, வேளுக்கையும் திருவாய்ப்பாடியும் என்று பொருள் கொள்ளவும்.

 

English Translation

The Lord of gods who never leaves my heart and his serpent bed wears a Tulasi garland and resides in the auspicious kanchinagar, Venkatam, Venka and Velukkai, cities of joy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top