(2289)

(2289)

நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,

நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. – வா,மருவி

மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,

கண்ணனையே காண்கநங் கண்.

 

பதவுரை

நல் நெஞ்சே

நல்ல மனமே!

நாராயணா என்று பல நாமம் சொல்லி

நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி

அம் கையால்

அழகியகையினாலே

நாம் தொழுதும்

நாம் தொழுவோம்

மருவி வா

இதற்கு நீயும் உடன்பட்டுவர

மண் உலகம்

பூமி முதலிய லோகங்களை

உண்டு உமிழ்ந்த

ஒருகால் உள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்

வண்டு அளையும் தண் துழாய்

வண்டுகள் படித்து ஒலிசெய்யபெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனுமான

கண்ணனையே

கண்ணபிரானையே

நம் கண்

நமது கண்கள்

காண்க

கண்டு களித்திடுக

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்திரியங்களெல்லாவற்றாலும் எம்பெருமானை அநுபவிக்கவேணு மென்கிறார். நாராயணாதி ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லுவதிலே வாய் ஊன்றியிருக்கவேணும், கைகள் அஞ்சலி பண்ணுவதிலே அவகாஹித்திருக்கவேணும், கண்கள் அப்பெருமானையே ஸேவீத்துக் கொண்டிருக்கவேணும். மனத்தின் துணையின்றி ஒரு இந்திரியமும் ஒரு காரியமும் செய்யமாட்டாதாகையாலே இவையித்தனைக்கும் நெஞ்சு உடன்பட்டிருக்கவேணும் என்றதாயிற்று.

“வண்டறையுந் தண்டுழாய்க்கண்ணனை“ என்றதனால் – தோளிணைமேலும் நன் மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில் மதுவைப்பருகி ரீங்காரம் செய்கின்ற வண்டுகளின் ஒலியே செவிக்கு விஷயமாகவேணுமென்பதும் அந்த திருத்துழாயின் பரிமளமே மூக்குக்கு விஷயமாகவேணு மென்பதும் தொனிக்குமென்றுணர்க. “ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும்“ என்ற முகுந்தமாலை ச்லோகம் இங்கு ஸமரக்கத்தகும்.

 

English Translation

Come, O Heart! Let us praise him with love, reciting “Narayana” and his many names, Let us fold our hands in worship.  The bee-humming Tulasi-garland Lord Kirshna, swallowed and remade the Earth. Let our eyes see and enjoy his form.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top