(2278)

(2278)

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,

செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு

படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,

குடமூக்கில் கோயிலாக் கொண்டு.

 

பதவுரை

செம் கண் நெடுமால்

சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!

திருமார்பா

பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!

இமையோர் தலை மகன் நீ

நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ

எங்கள் பெருமான்

எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு

குடமூக்கு இல்

கும்பகோக் க்ஷேத்ரத்தை

கோயில் ஆ கொண்டு

கோயிலாகத் திருவுள்ளம்பற்றி

பொங்கு படம் மூக்கின்

விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்

ஆயிரம் வாய்

ஆயிரம் வாயையுடையவனுமான

பாம்பு

ஆதிசேஷனாகிற

அணை மேல்

படுக்கையின் மீது

சேர்ந்தாய்

பள்ளி கொண்டருளினாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார்.

‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம். (கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.

 

English Translation

O Lord! You are the monarch of even the gods. O Senikanmal, with lotus-dame lakshmi on your chest! You recline on a thousand-hooded snake. You reside in the temple of kudandai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top