(226)
மையார் கண்டமட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்துஅவர் பின்போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்றுகுற்றம் பலபல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ புத்தகத் துக்குள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
பதவுரை
| மை ஆர் கண் |
– |
மையை அணிந்துள்ள கண்களையும் |
| மடம் |
– |
மடப்பம் என்ற குணத்தையுமுடையரான |
| ஆய்ச்சியர் மக்களை |
– |
இடைப் பெண்களை |
|
(உன் விஷயத்திலே) |
||
| மையன்மை செய்து |
– |
மோஹிக்கப்பண்ணி |
|
(அப்பெண்களுடைய) |
||
| கொய் ஆர் பூ துகில் |
– |
கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை |
| பற்றி |
– |
பிடித்துக்கொண்டு |
| அவர் பின் போய் |
– |
அப்பெண்களின் பின்னேபோய் |
| தனி நின்று |
– |
தனியிடத்திலேநின்று |
| பலபல குற்றம் |
– |
எண்ணிறந்த தீமைகளை |
| செய்தாய் |
– |
(நீ) பண்ணினாய்; |
|
(என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க) |
||
|
(அதற்கு யசோதை சொல்கிறாள்;) |
||
| பொய்யா |
– |
(தீ மை செய்ததுமல்லாமல், செய்யவில்லையென்று) பொய் சொல்லு மவனே! |
| உன்மை |
– |
உன்னைக் குறித்து |
| புத்தகத்துக்கு உள |
– |
ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி |
| பேசுவ |
– |
சொல்லப்படுகின்றனவான |
| பல புறம் |
– |
பற்பல உன் சொற்கள் |
| கேட்டேன் |
– |
(என் காதால்) கேட்டிருக்கின்றேன்; |
| ஐயா |
– |
அப்பனே |
|
(உன்னை அறிந்து கொண்டேன்;) |
||
|
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்; |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நீ இடைப் பெண்களுடைய கொய்சகத்தைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னே போய் அவர்களோடு ஏகாந்தமான இடத்திலே இருந்து சொல்லத்தகாத தீம்புகளைச் செய்தாய்; நீ செய்யும் தீம்புகளைப் பிறர் அறிந்து சொல்லும் அவற்றை எழுதத்தொடங்கினால் பெரியதொரு புஸ்தகமாக முடியும். அதனால், உலகத்தாரால் செய்யமுடியாதவற்றையும் செய்யவல்ல அதிமாநுஷத் தன்மையை யுடையவனென்று உன்னை அறிந்து கொண்டேன்; ஆதலால் உனக்கு அம்மந்தர அஞ்சுவேனென்பதாம். முதலடியில் “மக்களை” என்பதை உருபுமயக்கமாகக்கொண்டு ‘மக்கள் பக்கலிலே’ என ஏழாம் வேற்றுமைப் பொருளானது, மையன்மை செய்து – மோஹத்தைப் பண்ணி என்றுரைத்து கண்ணபிரான் தான் அம்மக்களிடத்தில். மயக்கமுற்று, அவர்கள் இவனை மறுத்த போதிலும் இவன் விடாமல் அவர்களுடைய புடவைகளைப் பற்றிக்கொண்டு ஏகாந்த ஸ்தலத்திற்சென்று பற்பல சிருங்கார சேஷ்டைகளைச் செய்தபடியைக் கூறுவதாகக் கருத்துரைத்தலும் ஒக்குமென்க. மடமக்கள்-மடமாவது-அறிந்தும் அறியாதுபோலிருத்தல் மாதர்க்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என நற்குணங்கள் அமையவேண்டுமென்று அறிக. மையல் எனினும் மையன்மை எனினும் மயக்கமே பொருளாம்; மை-பண்புப்பெயர் விகுதி; விகுதிமேல் விகுதி கொய்யார் பூந்துகில்=கொய்சகம்; ‘கொசாம்’ என்பது உலக வழக்கு. ‘பேசுவ’ என்கிறவிது பலவின்பால் படர்க்கை வினைமுற்று; அது இங்கு பெயரெச்சப்பொருள் தந்து நிற்றல் காண்க. வினைமுற்று வினையெச்சமாகலும் குறிப்பு முற்றெச்சமாகலும் உளதே, என்ற சூத்திரத்தில் ‘ஆகலும்’ என்ற(எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச) உம்மையை நோக்குக.
English Translation
Infatuating cowherd girls with large Kajal-lined eyes, you go after them and steal their frilled Sarees, then do many many wrongs. O False One, the complaints I hear about you could fill a book. O Master! I know you now, I fear to give you suck.
