(2236)
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், – வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண்.
பதவுரை
|
வென்றி |
– |
ஜய சீலமாய் |
|
அடல் |
– |
திக்ஷணமான |
|
ஆழி |
– |
சக்கரத்தை |
|
அறிவனே |
– |
ஸர்வஜ்ஞனான பெருமானே! |
|
ஏழ் விறப்பும் |
– |
இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும் |
|
எப்பொழுதும் |
– |
எல்லா அவஸ்தைகளிலும் |
|
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் |
– |
ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால் |
|
என்றும் மறந்தறியேன் |
– |
உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன் |
|
இன்பம் கடல் ஆழி |
– |
ஆநந்த ஸாகரத்தையும் |
|
அருளிக்காண் |
– |
எனக்கு அருள வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எளிதில் கைகூடாத காரியம், ஆனாலும் 1.“எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே“ என்றாற்போலே எப்படியாவது என்னை அகப்படுத்திக்கொள்ள வேணுமென்று நீ நெடுநாளாகவே க்ருஷிபண்ணிப்பொகையாலே உன்னுடைய நினைவு என்மேல் இடையறாது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது. ஆனால் இவ்வளவோடு நான் திருப்தியடைபவ வல்லேன். 2. “அந்தமில் பேரின்பத்து அடியரோருந்தமை“ என்னப்படுகிற இன்பக்கடலையும் அவாஹிக்கப்பெறவேணுமென்று ஆவல் கொண்டிருக்கும்படியேனை அந்த இன்பக் கடலிலும் அழுந்தச் செய்தருளாய் – என்கிறார்.
“இன்பக்கடல்“ என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி“ என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க. “இன்பம் ஆழிகடல்“ என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம் உன்னையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கு மடியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.
“நின்று நினைப்பொழியா நீர்மையால்“ என்றது –எம்பெருமான் இவ்வாழ்வார்தம்மையே நினைத்துக் கொண்டிருக்கிறபடியைக் கூறுவதாக உரைக்கப்பட்டது. இனிஇவ்வாழ்வார் எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பதைக் கூறுவதாகவே உரைக்கவுமாம். எல்லாப்பிறவிகளிலும் அடியேன் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்படியான தன்மை எனக்கு வாய்ந்திருப்பதனால் உன்னை யொருகாலும் மறந்தறியேன் என்றவாறு.
வென்றியடலாழிகொண்ட அறிவனே! – நீ ஸர்வசக்தனாயும் ஸர்வஜ்ஞனாயுமிருக்கையாலே என் காரியத்தைச் செய்து தலைக்கட்டுகை உனக்கு அரிதன்றேன் என்று குறிப்பிடுகிறார்போலும். “வென்றியிடலாழிகொண்ட“ என்றது – ஸர்வசக்தியுக்தனென்றபடி அருளிக்காண் அருள்செய் என்கை.
English Translation
O Discus-wielder Lord, omniscient ! I have never forgetten you. Through seven lives and seven times, I have kept you in my heart. On this account, you must reveal to me your deep-ocean abode.
