(2162)
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
வாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை?
பதவுரை
| ஆள் அமர் |
– |
யுத்தவீரர்கள் நெருங்கியிருக்கப்பெற்றதும் |
| வென்றி |
– |
ஜெயத்தையுடையதுமான |
| அடுகளத்துள் |
– |
(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்தகளத்திலே |
| அஞ்ஞான்று |
– |
(அசுரர்களைத் தேவர்கள் மேல்விழுந்து நலிந்த) அக்காலத்திலே |
| வாள் அமர் வேண்டி |
– |
(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி. |
|
(அதற்கு ஏற்ப) |
||
| வரை நட்டு |
– |
(தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாகநாட்டி. |
| நீள் அரவை சுற்றி |
– |
உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடைகயிறாகச் சுற்றி |
| கடைந்தான் |
– |
அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக்கடைந்தவனுடைய |
| பெயர் |
– |
திருநாமம் (எப்படிப்பட்ட தென்றால்) |
| பற்றி |
– |
(ஸம்ஸாரிகளை) வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டுபோய் |
| தொல் நரகை |
– |
பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை |
| கடத்தும் |
– |
தாண்டுவிக்கின்ற |
| படை |
– |
ஸாதனம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ப்ரயோஜநாந்தர பரர்கட்குங்கூடத் தன் திருமேனி நோவக் கடல்கடைந்து அமுதத்தை யெடுத்துக்கொடுத்து அத்தேவர்கட்கு அஸுரஜாதியால் யாதொரு தீங்கும் நேரிடாதபடி ரஷித்தருளு மெம்பெருமானுடைய திருநாமமே ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் உத்தாரகம் என்கிறார்.
கடல்கடையுங்காலம் தேவாஸுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியுங்காலமா யிருந்ததனால் “ஆளமர் வென்றியடுகளத்துள்” எனப்பட்டது; “ஆராத போரி லசுரர்களுந் தானுமாய்க், காரார் வரைநட்டு நாகங்கயிறாகப், பேராமல் தாங்கிக் கடைந்தான்” என்று சிறிய திருமடலிலுமருளிச் செய்யப்பட்டுளது.
நரகு என்றது ஸம்ஸாரத்தை.
English Translation
The wonder lord in the yore went to the battlefield intent on securing victory. He planted a mountain and churned the ocean with a long snake. To cross the long path of hell, chanting his names alone is the means.
