(2159)
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.
பதவுரை
| நெஞ்சே |
– |
மனமே! |
| வேழம் தொடர் |
– |
கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்துவந்த |
| வான் |
– |
பெரிய |
| கொடு |
– |
(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட |
| முதலை |
– |
முதலையை |
| சூழ்ந்த |
– |
(தப்பிப்போகாதபடி) எண்ணிகொன்றவனும் |
| படம் உடைய பைநாகம் பள்ளியான் |
– |
படத்தையும் பசுமைநிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத்திருப்பள்ளி மெத்தையாகவுடையனுமான எம்பெருமானது |
| பாதம் |
– |
திருவடிகளை |
| கொய் நாகம் பூ போது கொண்டு |
– |
கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு |
| கைதொழுதும் |
– |
தொழுவோம்; |
| எழு |
– |
எழுந்திரு; |
| (அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்) | ||
| இடர் |
– |
துக்கத்தை |
| படுவார் ஆர் |
– |
அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் நமக்காகச்செய்த செயல்களை நாம் அநுஸந்திபோமாகில் அவனது திருவடிகளில் அடிமைசெய்தே நிற்கவேண்டியதாகுமேயன்றி ஒரு நொடிப்பொழுதும் வெறுமனிருக்க முடியாது; நாம் அப்பெருமானை ஆச்ரயிக்கவே துக்கங்களெல்லாம் தொலைந்துபோம்; துக்கப்படுகைக்கு ஆளில்லை; ஒருகால் நமக்கு துக்கம் வந்தாலும் அது கஜேந்திராழ்வானைத் தொடர்ந்த முதலை பட்டது படும் என்றாராயிற்று.
இரண்டாமடியில், சூழ்ந்த என்ற பெயரெச்சம் பள்ளியா நென்பதைக்கொண்டு முடியும். முதலையை முடித்து கஜேந்திரனைக் காத்த கதை ப்ரஸித்தம்.
ஈற்றடியில், நாகம் ‘ புந்நாகம்’ என்ற வடசொற்சிதைவு.
English Translation
Who likes to suffer? Arise, O Heart! The Lord who rests on the serpent of a thousand hoods came to the rescue of the elephant caught in the crocodile’s jaws. With fresh Punnai flowers, let us worship his feet.
