(2149)

(2149)

உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,

உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்

பண்ணகத்தாய் நீகிடந்த பால்?

 

பதவுரை

விண்ணகத்தாய்

–

பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே!

மண்ணகத்தாய்

–

இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே!

வேங்கடத்தாய்

–

திருமலையில் நின்றருள் பவனே!

பண் நால் வேதம் அகத்தாய்

–

ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே!

உன் பெருமை

–

(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை

ஊழி தோறு ஊழி

–

காலமுள்ளதனையும்

(இருந்து ஆராய்ந்தாலும்)

உணர்வார் ஆர்

–

அறியக்கூடியவர் யாவர்?

உன் உருவம் தன்னை

–

உனது திவ்யாத்மஸ்வரூபத்தைத்தான்

உணர்வார் ஆர்

–

அறியக்கூடியவர் யாவர்?

நீ கிடந்த பால்

–

(ஆர்த்தரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்

உணர்வார் ஆர்

–

அறிய  வல்லாரார்? [எவருமில்லை.]

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லைநிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படியிருந்தாலும் அவன் தன்மை அறிவார்தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால் ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும் “ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.

 

English Translation

Who realises your glory? O Lord in the sky! O Lord on Earth! O Lord of Venkatam! O Lord of the four vedic chants! Who realises your forms? Who realises where you recline, age after every age?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top