(2149)
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்?
பதவுரை
|
விண்ணகத்தாய் |
– |
பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே! |
|
மண்ணகத்தாய் |
– |
இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே! |
|
வேங்கடத்தாய் |
– |
திருமலையில் நின்றருள் பவனே! |
|
பண் நால் வேதம் அகத்தாய் |
– |
ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே! |
|
உன் பெருமை |
– |
(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை |
|
ஊழி தோறு ஊழி |
– |
காலமுள்ளதனையும் |
|
(இருந்து ஆராய்ந்தாலும்) |
||
|
உணர்வார் ஆர் |
– |
அறியக்கூடியவர் யாவர்? |
|
உன் உருவம் தன்னை |
– |
உனது திவ்யாத்மஸ்வரூபத்தைத்தான் |
|
உணர்வார் ஆர் |
– |
அறியக்கூடியவர் யாவர்? |
|
நீ கிடந்த பால் |
– |
(ஆர்த்தரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான் |
|
உணர்வார் ஆர் |
– |
அறிய வல்லாரார்? [எவருமில்லை.] |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லைநிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படியிருந்தாலும் அவன் தன்மை அறிவார்தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால் ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும் “ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.
English Translation
Who realises your glory? O Lord in the sky! O Lord on Earth! O Lord of Venkatam! O Lord of the four vedic chants! Who realises your forms? Who realises where you recline, age after every age?
