(2145)
நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை?
பதவுரை
|
பிறர் பொருளை |
– |
பரமபுருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை |
|
நயவேன் |
– |
(என்னுடையதென்று) விரும்பமாட்டேன்; |
|
கீழாரோடு |
– |
ஸம்ஸாரிகளோடு |
|
நள்ளேன் |
– |
ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்; |
|
உயர்ந்தவரோடு அல்லால் |
– |
சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு) |
|
உயவேன் |
– |
காலக்ஷேபம் பண்ணமாட்டேன். |
|
திருமாலை அல்லது |
– |
எம்பெருமானையன்றி (தேவதாந்தரங்களை) |
|
தெய்வம் என்று ஏத்தேன் |
– |
தெய்வமாகக் கொண்டு துதிக்கமாட்டேன்; |
|
வியவேன் |
– |
(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வகுணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்; |
|
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு) |
||
|
என் மேல் |
– |
எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என்மேலே |
|
வினை |
– |
அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம் |
|
வரும் ஆறு என் |
– |
வரும்விதம் ஏது? [வரமாட்டாது] |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தமக்கும் தம்முடைய இந்திரியங்கட்கும் விஷபாந்தரங்களைக் கண்ணெடுத்துப் பாராதபடி எம்பெருமானிடத்தில் ஊற்றமுண்டானபடியை அருளிச்செய்யவே விஷயாந்தரங்கள் துரவாஸநையால் வந்து மேல்விழுந்து உம்மை இழுத்துக்கொண்டு சென்றால் என்ன செய்வீர்?’ என்று ஒரு கேள்வி பிறக்க , எம்பெருமானுடைய அநுக்ரஹத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறேனாதலால் அப்படி நிகழ ஹேதுவில்லையென்கிறார்.
பிறர்பொருளை= “உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேதி உதஹ்ருத:” என்னும் பிரமாணத்தை அடியொற்றி இங்கு எம்பெருமானை ‘பிறர்’ என்ற சொல்லால் குறித்தனர் சேதநாசேதநங்களிற்காட்டில் விலக்ஷணன் என்றபடி. அவனுடைய பொருள் ஆத்மவஸ்து (கண்ணிநுண் சிறுத்தாம்பில் “ நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” என்ற விடத்திற்கு வியாக்கியானமுங் காண்க.) ஸர்வேச்வரனுக்குக் கெளஸ்துபஸ்தாநீயமாகி அப்பெருமான் ‘தன்னது’ எம்றபிமாநித்திருக்கும் இவ்வாத்மவஸ்துவை ’என்னது’ என்று நினைத்தல் இராவணனது செயலோடொக்கு மாதலால் “நயவேன் பிறர்பொருளை” என்றார். இராவணனுடைய செய்கைக்குத் துணையாயிருந்த மாரீசன் போல்வாரோடு நட்புக்கொள்ளமாட்டேனென்பது ‘நள்ளேன் கீழாரோடு’ என்றதன் கருத்து.
”திருமாலையல்லது வியவேன் “ என்று கூட்டி – திருமாலைக் கண்டாலன்றி ( தேவதாந்தரங்களைக் கண்டால் அதனால்) மநஸ்ஸில் சிறிதும் மகிழ்ச்சிகொள்ள மாட்டேன் என்பதாக உரைத்தலுமாம். வருமாறென் என்மேல் வினை? = “அவச்யமநுபோக்தவ்யம் க்ருதம் கர்மகபாசுபம்” [ அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளின் பலன்களை அவரவர் அநுபவித்தே தீரவேணும் ] என்கிற சாஸ்த்ரம் பகவத் பக்தர்கள் விஷய்த்தில் விலைச்செல்ல மாட்டாதென்று காட்டுகிறபடி. “வருமாறென் நம் மேல்வினை” என்ற பாடமுமுண்டு; அப்போது, கீழெல்லாம் நயவேன், நள்ளேன், உயவேன், வியவேன். ஏத்தேன், என்று ஒருமையாகவந்து இங்கே நம் என்று பன்மையாக வந்தது- ஒருமையிர் பன்மைவந்த வழுவமைதி யென்னவேண்டும் . தம்மோடு ஸம்பந்தம் பெற்றவர்களையுங் கூட்டிக்கொண்டு நம்மேலென்கிறாரென்றலும் பொருந்தும்.
இரண்டாமடியில், உயவேன் என்றது உசாவேன் என்றப்டி: உசாவுதலாவது ஒருவருக்கொருவர் வார்த்தையாடிப் போதுபோக்குதல்; ”உசாத்துணை” என்ற ஆன்றோர்களின் ஸ்ரீ ஸூக்தியுங்காண்க.
English Translation
he pleasure of lowly company, I shall shun, and seek the company of highly principled ones alone. I shall not covet others wealth and never extol a god other than Tirumal. Now I am firm. How can karmas accrue on me?
