(2129)
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே மகிழ்.
பதவுரை
|
ஆழி நெஞ்சே |
– |
கம்பீரமான மனமே! |
|
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்] |
||
|
ஒரு கழல் |
– |
ஒரு திருவடியை |
|
எடுத்து |
– |
மேலுலகங்களிலே செல்ல நீட்டி |
|
ஒரு கை |
– |
ஒரு திருக்கையாலே |
|
சுற்றி |
– |
[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து |
|
ஓர் கை மேல் |
– |
மற்றொரு திருக்கையிலே. |
|
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்செரு ஆழி ஏந்தினான் |
– |
இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற [அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்] அழலையுமிழ்கிற யுத்தசாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய |
|
சே அடிக்கே செல்ல |
– |
திருவடிகளிலே சென்று கிட்டும்படி |
|
மருவு |
– |
பொருந்துவாயாக; |
|
மகிழ் |
– |
இதை ஆனந்தரூபமாக ஏற்றுக்கொள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.
English Translation
With one foot, he scooped up Namushi; with one hand, swirled him in the air; then with the other hand he spun his discus that gods and Asuras around feared. O Good Heart of mine! Desire to attain his feet and rejoice.
