(21)

(21)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.

பதவுரை

நங்காய்

பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்)
கிடக்கில்

(தொட்டிலில்) கிடந்தானாகில்
தொட்டில்

தொட்டிலானது
கிழிய

சிதிலமாம்படி
உதைத்திடும்

(கால்களினால்) உதையாநின்றான்
எடுத்துக்கொள்ளில்

(இவனை இடுப்பில்) எடுத்துக்கொண்டால்
மருங்கை

இடுப்பை
இறுத்திடும்

முறியாநின்றான்.
ஒடுக்கி

(இவனுடைய கைகால்களை) ஒடுக்கி
புல்கில்

மார்வில் அணைத்துக்கொண்டால்
உதரத்து

வயிற்றிலே
பாய்ந்திடும்

பாயாநின்றான்
மிடுக்கு

(இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி
இலாமையால்

(இப்பிள்ளைக்கு) இல்லாமையால்
நான்

தாயாகிய நான்
மெலிந்தேன்

மிகவும் இளைத்தேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – யசோதையானவள் தன் ஸமீபத்திலுள்ள பெண்களை நோக்கிக் கண்ணனுடைய பருவத்துக்குத் தகுதியில்லாத செயல்களைச் சொல்லுவதாக இப்பாசுரம் அமைந்தது.  நங்காய்! என்று ஏகவசநமான ஸம்போதநம்சாதியொருமையாய், ‘நங்கைமீர்களே!’ என்றபடி.  பருவத்திற்குத் தகுந்த செயல்களைச்செய்யும் புத்திரர்களைப் பெற்றிருப்பதனால் நீங்கள் ஒன்றும் குறைவில்லாமலிருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொண்டவாறு என்னுடைய பிள்ளையைத் தொட்டிலில் கிடக்காவிட்டாலோ, இவன் தொட்டில் கிழிந்துபோம்படி காலாலுதைக்கிறான்.  ‘கால்கள் மெத்தென்றிருப்பதால் நோயுண்டாகுமே’ என்று தொட்டிலினின்றும் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால், இடத்தை விட்டு நழுவி இடுப்பை முறித்துவிடுகிறான்.  ‘எனக்கே இக்குழந்தை செய்யும் சேஷ்டையினால் இடுப்பு முறியும்போது இக்குழந்தைக்கு எவ்வளவு நோவுண்டாகுமோ! இஃது இவனுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்துக்குத் தகாதே! என்று நினைத்து ஒரு தொழிலுஞ் செய்யமுடியாதபடி மார்பிலே வலிய அணைத்துத் தழுவிக்கொண்டால் கால்களினால் வயிற்றை உதைக்கிறான்.  இப்படி இவன் தன்னுடைய பருவத்திற்குத் தகாத காரியங்களைச் செய்வதை நினைத்து நினைத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன் என்கிறாள்.

மிடுக்கு இலாமையால் –  இதற்கு இருவகையாகப் பொருள்கொள்ளலாம்.  இப்படி மிகச்சிறிய குழந்தையாகிய இவனுடைய செய்கையைப் பொறுக்கும் வல்லமை எனக்கு இல்லாமையால் என்றும், இந்த செய்கைகளையெல்லாம் தாங்குவதற்கு வேண்டிய சக்தி இந்தக் குழந்தைக்கு இல்லாமலிருப்பதனால் என்றும்.

English Translation

Lay him in the cradle, and he kicks like it would break; take him to the waist, and he clings like a wrench; hold him in front and he trounces the belly.  I can bear it no more, Ladies, I am exhausted!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top