(1871)

(1871)

மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை

புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்

கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்

குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே.

 

பதவுரை

மணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள்

பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே

ஆதரத்தை புணர்ந்த சிந்தை

ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய்

புன்மை யாளன்

மிகவும் நீசனான இராவணன்

பொன்ற

முடியும்படியாகவும்

கணங்கள் உண்ண

பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும்

வரி சிலையால்

அழகிய வில்வழியாக

வாளி ஆண்ட

அம்புகளைப் பிரயோகித்த

காவலனுக்கு

ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய

இளையோன்

திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய

குணங்கள் பாடி

திருக்குணங்களைப் பாடிக்கொண்டு

குழமணிதூரம் ஆடுகின்றோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்த்ரசாபல்யத்தை மேற்கொண்டதனால் நீசர்களில் முதல்வனாகக் கணக்கிடப்பெற்ற இராவணன் முடிந்துபொகும்படியாகவும் அவனுடலைக் கபுக்கள் முதலியவை ஏறியுண்ணும்படியாகவும் வில்லிலே அம்பைத்தொடுத்த பெருமாளுக்குத் தம்பியாய் ;இளையபெருமாள்; என வழங்கப்படுபவரான லக்ஷ்மணருடைய திருக்குணங்களைப் பாடிக்கொண்டு குழமணிதூர மாடுகின்றோமென்கிறார்கள். ;மணங்கள் நாறும்வார்குழலார் என்றது சிந்தை – ஸ்த்ரீவிஷயமான காதலைக்கொண்ட நெஞ்சுவாய்ந்தவன் என்றபடி.

 

English Translation

Our lowly king Ravana, obsessed with throughts of company with fragrant-coiffured dames was fed to the elements by the great bow-wielder Rama;s arrows.  We sing his younger brother Lakshmanai;s praise, we dance the Kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top