(1870)

(1870)

ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக்

கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல்

நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று

கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே.

 

பதவுரை

ஞாலம் ஆளும்

பூமியை யெல்லாம் ரக்ஷித்தருள்பவராய்

உங்கள் கோமான்

உங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்

எங்கள் இராவணற்கு

எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனுக்கு

காலன் ஆகி வந்த ஆ கண்டு

ம்ருத்யுவாக வந்தபடியைப் பார்த்து

அஞ்சி

பயப்பட்டு,

கரு முகில் போல்

;காளமேகம் போன்ற

நீலன் வாழ்க

நீலன் வாழவேணும்,

சுடேணன் வாழ்க

ஸுஷேணன் வாழவேணும்

அங்கதன் வாழ்க

அங்கதன் வாழவேணும்

என்று

என்று ஒவ்வொருவர்க்கும் பல்லாண்டுபாடிக்கொண்டு

கோலம் ஆக

அழகாக

குழமணிதூரம் ஆடுகின்றோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வானரமுதலிகாள்! பூமண்டலம் முழுவதையும் தனிக்கோல செலுத்தி ஆளப்பிறந்த உங்கள் ஸ்வாமியான இராமபிரான் எங்களுக்குத் தலைவனாயிருந்த ராவணனுக்கு ம்ருத்யுஸ்வரூபியாய் வந்தாரென்பதை நன்கு தெரிந்து கொண்டோம், இனி நாம் மார்பு நெறித்து வாழ்வதென்பதில்லை யென்று நிச்சயித்துக் கொண்டு உங்களுக்கு மங்களாசாஸநஞ் செய்வதையே யாத்திரையாகக் கொண்டோம், நீலனுக்குப் பல்லாண்டு, ஸுஷேணனுக்குப் பல்லாண்டு, அங்கதனுக்குப் பல்லாண்டு; என்று சொல்லுபவர்களாய்க் குழமணி தூரமாடுகின்றோங் காண்மினென்கிறார்கள்.

காலன் -வடசொல். சுடணேன் -வாலிக்கு மாமனாராகிய ஒரு வாநரன்.

 

English Translation

The world ruler your king became the Lord of death for our king Ravana, Long live your Nila, Long! live your sushenan, Long live your! Angadan. We fear them and we dance the kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top