(1869)

(1869)

எம்பி ரானே என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே

அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்

நம்பி அனுமா சுக்கி ரீவ அங்கத னே நளனே

கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே.

 

பதவுரை

இந்திரசித்து

இந்த்ரஜித்தானவன்

எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே

பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல்

அம்பின் வாய் பட்டு

பாணங்களுக்கு இரையாகி

ஆற்ற கில்லாது

தரித்திருக்க மாட்டாமல்

அழிந்தான்

மாண்டுபோனான்

நம்பி அனுமா!

சுக்கிரீவா! அங்கதனே! நளனே!

கும்பகரணன்

கும்பகர்ணனானவன்

பட்டுப் போனான்

முடிந்துபோனான்

குழமணிதூரம் ஆடுகின்றோம்.

 

English Translation

Alas, Indrajit did not submit and say, “My Lord, my Master”, and was killed by an arrow inescapably. O Lord Hanuman! Sugriva! Angada! Nalal Even kumbhakarna is follen, we dance the kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top