(1856)
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே.
பதவுரை
|
கம்பம் |
– |
(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய் |
|
மா |
– |
பெரிய வடிவுடைத்தான |
|
களிறு |
– |
(குவலயாபீடமென்னும்) யானை |
|
அஞ்சி |
– |
பயப்பட்டு |
|
கலங்க |
– |
கலங்கி முடியுமாறு |
|
ஓர் கொம்பு கொண்ட |
– |
அதன் கொம்பை முறித்தெறிந்தவனும் |
|
குரை கழல் |
– |
ஒலிக்கின்ற வீரக்கழலை யுடையவனும் |
|
கூத்தனை |
– |
விசித்திரமான நடையுடையவனும் |
|
நம்பனை |
– |
(அன்பர்) விச்வஸிக்கத் தகுந்தவனுமான பெருமானை |
|
கொம்புஉலாம் பொழில் |
– |
கிளைகள் விளங்குகின்ற சோலைகள் யுடைத்தான |
|
கோட்டியூர் |
– |
திருக்கோட்டியூரிலே |
|
போய் கண்டு |
– |
சென்று ஸேவித்து |
|
நாவாயுள் சென்று காண்டு |
– |
திருநாவாயில் போய் ஸேவிப்போம் |
English Translation
The Lord who plucked the tusk of a rutted elephant and killed him with his tinking-anklet-dancing-feet gave us Darshan in Tirukkottiyur surrounded by flowery groves. Today we shall go and have his Darshan of our Lord in Tirunavai
