(1849)
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே.
பதவுரை
|
பொன்னை |
– |
பொன்போல விரும்பத்தகுந்தவனும் |
|
மா மணியை |
– |
நீலமணிபோன்றவனும் |
|
அணி ஆர்ந்தது ஓர் மின்னை |
– |
அழகுமிக்கதொரு மின்னற் கொடிபோன்று உஜ்ஜவல ஸ்வரூபியானவனும் |
|
என்னை ஆளுடை ஈசனை |
– |
என்னை அடிமைகொண்ட ஸ்வாமியுமான |
|
எம்பிரான் தன்னை |
– |
ஸர்வேச்வரனை |
|
யாம் |
– |
அடியோம் |
|
(நெருநல்) |
– |
நேற்று |
|
வேங்கடத்து உச்சியில் |
– |
திருவேங்கடமலையின் சிகரத்தில் |
|
கண்டு |
– |
ஸேவித்து, |
|
(இன்று) |
– |
இன்றைக்கு |
|
தண்காவிலே சென்று காண்டும் |
– |
திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதற்பாட்டிலுள்ள ‘நெருநெல்’ ‘இன்று’ என்னுஞ் சொற்கள் பாசுரந்தோறும் அந்வயிக்கவுரியன. நெருநெல் வேங்கடத்துச்சியில் கண்டு இன்று தண்காவில்காண்டும் என்றவாறு. இங்ஙனமே மேற்பாசுரங்களிலும் காண்க.
இப்பாசுரங்களில் எம்பெருமானுக்கு இடுகிற விசேஷணங்களை யெல்லாம் ஒருசேர அந்வயித்துக் கொண்டு முடிவில் ‘அத்தலத்தில்கண்டோம், இத்தலத்தில் காண்போம்’ என்பதாக அந்வயித்துக்கொள்க. அன்றி, பாசுரப்போக்கு உள்ளபடியே அந்வயித்துக் கொள்வதும் தகும்.
திருத்தண்கா – காஞ்சீபுரத்திலுள்ள விளக்கொளியெம்பெருமாள் ஸந்நிதி திருத்தண்கால் வேறு, அது பாண்டிநாட்டிலுள்ளது.
English Translation
My gold, my gem, my beautiful lightning, my Lord and Master, -we hade his Darshan in Venkatam; today we shall go and have his Darshan in Tiruttanka
