(1828)

(1828)

மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து,

பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த,

தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற,

கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ.

 

பதவுரை

மூவரில்

த்ரிமூர்த்திகளுள்

முன் முதல்வன்

முக்கியனும்

முழங்கு ஆர்

(திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய

கடலுள்

திருப்பாற்கடலிலே

கிடந்து

திருக்கண்வளர்ந்தருளி

உந்தி

திருநாபியில்

அலர்

மலர்கின்ற

பூ தன்னுள்

(தாமரைப்) பூவிலே

புவனம்

உலகத்தை

படைத்து

ஸ்ருஷ்டித்து

உண்டு

(பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி

உமிழ்ந்த

பிறகு வெளிப்படுத்திவனும்

தேவர்கள் நாயகனை

நித்யஸூரிகளுக்கு நாதனும்

திருமாலிருஞ் சோலை நின்ற

திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான

கோவலர் கோவிந்தனை

கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை

கொடி எர் இடை

கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள்

கூடும் கொலோ

அணையப்டபெறுவளோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலிருஞ்சோலையழகரோடே கூடும்படியான பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோவென்று ஆழ்வார் கவலைப்படுதல் இத்திருமொழிக்குப் பரமதாற்பரியம்.

மூவரில் முன் முதல்வன் – இந்திரனைக்கூட்டி மூவராக்கி, அம்மூவர்களிற் காட்டிலும் முபுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர். இரண்டாமடியில் “பூ வளருந்தி“ என்றும் பாடமுண்டு. புவனம் – வடசொல்.

 

English Translation

The first-cause Lord of the tri-murti, the Lord who reclines in the ocean, the Lord who made the universe on his lotus navel, then swallowed it, and remade it, the Lord of the celestials, the cowherd-Lord Govinda, resides in Tirumalirumsolai. Will my creeper-thin-waisted daughter blend with him today? I wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top