(1819)
இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம் கோயில்
விண்டலர் தூளி வேய்வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
பதவுரை
|
இண்டையும் |
– |
பூமாலையையும் |
|
புனலும் |
– |
தீர்த்தத்தையும் |
|
கொண்டு |
– |
ஏந்திக்கொண்டு |
|
இடைஇன்றி |
– |
நிரந்தரமாக |
|
தொழுதும் |
– |
ஸேவிப்போம் |
|
எழுமின் என்று |
– |
எழுந்திருங்கள் என்று சொல்லிக்கொண்டு |
|
இமையோர் |
– |
நித்யஸூரிகளும் |
|
அண்டரும் |
– |
தேவர்களும் |
|
பாவ |
– |
ஆச்ரயிக்க |
|
அரவு அணை துயின்ற |
– |
சேஷசயனத்தில் திருக்கண்வளர்ந்தருள் கின்றவனும் |
|
சுடர் முடி |
– |
சோதிமிக்க கிரீடத்தை யுடையவனுமான |
|
கடவுள் தம் |
– |
எம்பெருமானுடைய |
|
கோயில் |
– |
இருப்பிடமாய் |
|
விண்டு அலர் |
– |
விண்டுவிரியாநிற்பதாய் |
|
தூளி |
– |
தூள்களையுடையதான |
|
வேய் |
– |
மூக்கில் |
|
வளர் |
– |
வளரப்பெற்ற |
|
புறவில் |
– |
சுற்றுப்பக்கங்களில் |
|
விரை |
– |
பரிமளம் மிக்க |
|
குறிஞ்சி மலரின் |
– |
குறிஞ்சிப்பூவினுடைய |
|
நறு தேன் |
– |
செவ்வித்தேனிலே |
|
அமர் |
– |
படிந்த |
|
வண்டு |
– |
வண்டுகளையுடைய |
|
சாரல், மாலிருஞ்சோலை வணங்குதும் மடநெஞ்சே வா |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெஞ்சமே! திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா, அஃது எப்படிப்பட்ட தலம் தெரியுமோ? மேலுலகத்தவர்கள் தங்கள் போல்வாரான பக்தர்களை நோக்கி, “நல்ல பூமாலைகளையும் அர்க்கிய பாத்ய ஆசமநீயங்களுக்கு உரிய தீர்த்தத்தையும் சேகரித்துக்கொண்டு புறப்படுங்கோள்“ என்று சொல்லிப் பலரையுங் கூட்டிக்கொண்டு வந்து ஆச்ரயிக்கத் (திப்பாற்கடலிலே) திருவனந்தாழ்வான் மீது திருக்கண்வளர்ந்தருளின பெருமான் அவ்விடத்திற்காட்டிலும் இதுவே பாங்கான விடமென்று போந்தருளித் திருவபிஷேகமணிந்து வாழுமிடமாயிற்று இத்திருமலை. இன்மும், விண்டு விரிகின்ற மூங்கில்கள் வளரப்பெற்ற சுற்றுப்பக்கங்களில் நறுமணம் மிக்க குறிஞ்சிப் பூக்களினுடைய செவ்வித்தேனிலேபடிந்த வண்டுகளையுடைய பர்யந்தங்களை யுடையது.
English Translation
O Frail Heart! Gods and celestials stand endlessly with fresh garlands and pure water, to offer worship and service to the tall-crowned serpent-recliner Lord. He resides in Malirumsolai amid groves of Bambook thickets where bees collect honey from mountain flowers. Come, let us offer worship there
