(1809)
மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
பதவுரை
|
நெஞ்சே |
||
|
மின்னும் |
– |
மின்னலையும் |
|
மா வல்லியும் |
– |
அழகிய கொடியையும் |
|
வஞ்சியும் |
– |
வஞ்சிக் கொம்பையும் |
|
வென்ற |
– |
தோற்பித்த |
|
நுண் இடை |
– |
நுட்பமான இடுப்பு |
|
நுடங்கும் |
– |
துவளும்படியிருப்பவர்களாய் |
|
அன்னம் மென் நடையினார் |
– |
அன்னம்போல் மெதுவான நடையையுடையரான மாதருடைய |
|
கல்வியை |
– |
புணர்ச்சியை |
|
அருவருத்து |
– |
வெறுத்து |
|
அஞ்சினாய்ஏல் |
– |
அச்சமுறுவாயாகில், |
|
முன் |
– |
முன்பொரு கால் |
|
துன்னு மாமணி முடி பஞ்சவர்க்கு ஆகி |
– |
நெருங்கின சிறந்த ரத்னங்களிழைத்த கிரீடமணியத் தக்க பஞ்சபாண்டவர்களுக்காக |
|
தூது சென்ற |
– |
தூது நடந்த |
|
மன்னால் வல்லவாழ் மருவு- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “மின்னும் ஆவல்லியும்“ என்று பிரித்தார் அரும்பதவுரைகாரர், அதுவேண்டா, “மாவல்லியும்“ என்றே பிரிக்க. அஞ்சினாயேல் -“பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்“ என்னுமாபோலே இவர்களோடே கூடி நாம் எங்ஙனே வாழ்வது! என்று பயமுண்டாகில் என்றபடி.
துன்னமாமணிமுடிப் பஞ்சவர்க்கு -கண்ணபிரான் துரியோதனாதியர் பக்கல் தூது செல்லுங்காலத்தில் பாண்டவர்கள் முடியிழந்து கிடந்தாலும் அவர்களே முடிபுனைந்து அரசாட்சிபுரிய உரிய யார் என்னும் பகவதபிப்பிராயத்தால இங்ஙனமருளிச் செய்யப்பட்ட தென்க.
English Translation
O Heart! If you despise the union with dames of swan-like gait and lightning-thin waist, and fear that life then learn to speak of the glory of Tiruvallavai, abode of the Lord who went as a messenger for the crowned kings, the, five Pandavas
