(1800)

(1800)

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்,

கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்,

ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி,

கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே.

 

பதவுரை

தொண்டீர்காள்

பாகஸதர்களே!

வாழ கண்டோம்

உஜ்ஜீவிக்கும் வகையறிந்தோம்

ஏழை செம் கால்

மிருதுவாய்ச் சிவந்த கால்களையுடைய

இன் துணை நாரைக்கு

இனிய துணையாகிய நாரைச்சேவனுக்கு

இரை தேடி

உணவு தேடிக்கொண்டு

கூழை பார்வை

க்ருத்ரிமமான பார்வையை

கார் வயல் மேயும்

கருவடைந்த வயல்களிலே மேயப்பெற்றதும்

கேழல்

வராஹாவதாரம் செய்தருளினவராய்

செம் கண்

செந்தாமரைக் கண்ணராய்

மா முகில் வண்ணர்

காளமேகம் போன்ற நிறத்தையுடையவரான பெருமாள்

மருவும் ஊர்

பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதுமான

குறுங்குடி

திருக்குறுங்குடியை

வந்து காண்மின்

வந்து ஸேவியுங்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாசுரந் தொடங்கும்போதே “வாழக்கண்டோம்“ என்று தொடங்குகிற ஆழ்வாருடைய களிப்பை என் சொல்லுவோம்!, கீழ்த்திருமொழியில் “என்னெஞ்சகம் சோரவீரும்“ என்றும் “ஓரிரவுமுறங்கா திருப்பேன்“ என்றும், “பாவியேனாவியை வாட்டஞ் செய்யும்“ என்றும் கூறின அலமாப்பெல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல் அகன்றொழிந்தமை தோன்ற “வாழக்கண்டோம்“ என்று களித்துப் பேசுகிறார். “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்“ என்றாற்போலே தொண்டுபூண் டமுதமுண்பதில் பாரிப்புக் கொண்டிருக்குமவர்களே! நாம் ஸத்தை பெறுவதற்கு ஒரு நல்விரகு கண்டோம் திருக்குறுங்குடியை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறார். பிரளயப் பெருவெள்ளத்தில் அழுந்திப் பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்காக வராஹமூர்த்தியாய்த் திருவவதரித்தவரும், அப்படி ஸம்ஸாரப் பெருவெற்றத்தில் அழுந்திக் கிடக்கின்ற நம்மையெல்லாம் கரை சேர்ப்பதற்காகக் கொண்ட கொந்தளிப்பு திருக்கண்களில் விளங்கும்படி யிருப்பவரும், கண்ட மாத்திரத்தில் தாபமெல்லாமாறும்படியாய்க் குளிர்ந்து முகில்போன்ற வடிவையுடையராயிருப்பவர் அவதாரம்போலே தீர்த்தம் பிரஸாதித்துப் போய்விடாதே நித்யவாஸம் பண்ணகிறவிடங் காண்மின் திருக்குறுங்குடி.

 

English Translation

Devotees! We have found a way to live, come here and seel soft, red-footed water-hens search for worms for their mates, wading through ripe paddy fields with sharp eyes, in kurungudi, It is the abode of the dark cloud-hued Lord with lotus eyes who came as a bear

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top