(177)

(177)

ஆலத் திலையான் அரவி னணைமேலான்

நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்

பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த

கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா

பதவுரை

(ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு)

ஆலத்து இலையான்

–

ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும்
அரவின் அணை மேலான்

–

(எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்பவனும்
நிலம் கடலுள்

–

கருநிறமான சமுத்திரத்தில்
நெடுங்காலம்

–

வெகுகாலமாக
கண் வளர்ந்தான்

–

யோக நித்ரை செய்பவனும்
பாலம் பிராயத்தே

–

குழந்தைப்பருவமே தொடங்கி
பார்த்தற்கு

–

அர்ஜுநனுக்கு
அருள் செய்த

–

க்ருபை செய்த
கோலம்

–

அழகிய வடிவத்தையுடைய
பிரானுக்கு

–

தலைவனுமான இவனுக்கு

ஓர் கோல் கொண்டு வா;

குடந்தை கிடந்தாற்கு ஓர் ** வா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆல்+இலையான்=(அத்துசாரியைப் பெற்று) ஆலத்திலையான். கஷீராப்தி எம்பெருமான் திருமேனியின் நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுமாதலால் ‘நீலக்கடல்’ எனப்பட்டது; “**************” என்று போஜராஜன் சொல்லியுள்ளது காண்க. அன்றி, “உவர்க்குங்கருங்கடல் நீருள்ளான்” என்றபடி லவணஸமுத்ரத்தில் பள்ளிகொண்டிருப்பதாகக் கூறுவதும் உண்டாதலால் அதுவுங்கொள்ளத்தக்கதே. ….

English Translation

The Lord appeared as a child on a fig leaf; he reclines on a serpent and sleeps for long in the deep ocean. He appears as the Archa reclining in Kudandai. Even in his childhood he graced Arjuna. He is the beautiful child here. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top